பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 269

துறவி-துறவு. துறவியின் உறவு பூண்ட தூயவர்  துணைவன்-
இராமபிரான் "மாமுனிவர்க்குறவாகி வனத்திடையே வாழும் கோ"
(2325) என்று முன்னும் கூறுதல் காண்க.   இராமபிரான் எனக்கு
அடைக்கலம்   தருதலால்   அசுரப்பிறப்பிலிருந்து   பெயர்ந்து
அமரனானேன்   என்பான்.  அரக்கன்   என்னும்   பிறவியின்
பெயர்ந்தேன். என்றான்.   இராமபிரானைச்  சரண்புகுந்த  நான்
நரகத்தொல்லையிலிருந்தும்     தப்பியவனாவேன்    என்பான்
'நரகினில் பிழைப்பதானேன்' என்றான். குறையும்-சிறிதும். 
 

(126)
 

இராமனிடம் விரைவில் செல்லுமாறு சுக்கிரீவன் கூறுதல்
  

6491.

திருத்திய உணர்வு மிக்க செங் கதிர்ச் செல்வன்

செம்மல்,

'ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும், உயிரின் 

ஓம்பும்

கருத்தினன் அன்றே, தன்னைக் கழல் 

அடைந்தோரை; காணும்

அருத்தியன், அமலன்; தாழாது ஏகுதி, அறிஞ!' 

என்றான்.

 

திருத்திய உணர்வின் மிக்க- (இராமபிரானது சொற்களால்)
திருந்திய நல்லுணர்வு மிகுந்தவனாகிய; செங்கதிர்ச்  செல்வன்
செம்மல்
- சிவந்த கிரணங்களை உடைய சூரிய   குமாரனாகிய
சுக்கிரீவன்; ஒருத்தரை   நலனும்   தீங்கும்   தேரினும் -
(வீடணனை நோக்கி) இராமன் ஒருவரை  நன்மை,   தீமைகளை
ஆய்ந்தறியினும்; தன்னைக் கழல் அடைந்தோரை  உயிரின்
ஓம்பும்கருத்தினன்
- தன்னைச்சரண்' அடைந்தோரை உயிரினும்
சிறந்தோராகக் கருதிப் பேணும்  கருத்துடையவன்   அல்லவா?
காணும் அருத்தியன் அமலன் - உன்னைக்காணும் விருப்பம்
உடையவன் அந்தக் குற்றமற்ற பெருமான் (ஆதலால்); அறிஞ !
தாழாது  ஏகுதி என்றான் 
-   அறிவு   மிக்கவனே! காலம்
தாழ்த்தாது அவனிடம் செல்வாயாக என்றான்.
 

முன்பு வீடணனை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறியவன்
சுக்கிரீவன்   இராமபிரானது   நல்லுரை   கேட்டுத்   திருந்திய
நல்லுணர்வுடையவனானான்   என்பதால் 'திருத்திய  உணர்வின்
மிக்க'   என்றார்.    ஒருவர்   செய்யும்   நன்மை,   தீமைகள் 
ஆய்ந்தறியும்   இயல்புடைய      இராமபிரான்      தீமையே 
புரிபவனானாலும்   தன்னைச்   சரணடைந்தோரை   உயிரினும்
மேலாகக் கருதி ஆதரிக்கும் பண்புடையவன்