என்பதை 'கழல் அடைந்தோரை உயிரின் ஓம்பும் கருத்தினன்' என்றார். உயிரின்-உயிரைவிட 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்ற குறளில் (131) இப்பொருள் வந்தது காண்க. அருத்தி- விருப்பம். தாழாது - காலம்தாழ்த்தாமல். |
(127) |
6492. | மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச் |
| செல்ல, |
| மை தவழ் கிரியும் மேருக் குன்றமும் வருவது என்ன, |
| செய் தவம் பயந்த வீரர், திரள் மரம் ஏழும் தீய |
| எய்தவன் இருந்த சூழல், இருவரும் எய்தச் சென்றார். |
| |
மொய் தவழ் கிரிகள் - வலிமை பொருந்திய மலைகள்; மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல - வேறுபலவும் தம்மைப்பின் தொடர்ந்து விரைந்து செல்ல; மைதவழ் கிரியும்- மேகங்கள் தங்கிய பெரியதொரு மலையும்;- மேருக்குன்றமும்- பொன்னிறமான மேருமலையும்; வருவதென்ன - சேர்ந்து வருவது போல; செய்தவம் பயந்த வீரர்- தாங்கள் செய்த தவத்தால் (இராமனைச் சரணடையும்) பயனைப் பெற்ற வீரர்களான வீடணனும், சுக்கிரீவனும்; திரள் மரம் ஏழும் தீயஎய்தவன்- திரண்டு நின்ற மராமரங்கள் ஏழும் தீய்ந்து போகும்படி அம்பெய்தவனான இராமபிரான்; இருந்த சுழல் இருவரும் எய்தச் சென்றார் - இருந்த இடத்துக்கு அந்த இருவரும் விரைந்து சென்றனர். |
மொய் - வலிமை. தவழ் - பொருந்திய. மைதவழ்கிரி - வீடணனுக்குவமை. மேருக்குன்றம்-சுக்கிரீவனுக்குவமை. |
(128) |
வீடணன் இராமபிரான் திருவடிகளில் விழுந்து வணங்குதல் |
6493. | மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு |
| காப்ப, |
| நாற் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன், நாமப் |
| பாற்கடல் சுற்ற, விற் கை வட வரை பாங்கு நிற்ப, |
| கார்க் கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக் |
| கண்டான். |
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் - வானரவீரர்கள் சூழ்ந்து நின்ற இடத்தில்; இளையவன் மருங்கு காப்ப - இளையவனாகிய இலக்குவன் பக்கத்திலே நின்று பாதுகாக்க; நாற்கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன்- நான்கு கடல்களாலும் சூழப்பட்ட |