பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 271

உலகத்தின்   மன்னனான   தயரனது புதல்வனாகிய இராமபிரான்;
நாமப் பாற்கடல் சுற்ற -   புகழ்மிக்க   பாற்கடல்   தன்னைச்
சூழ்ந்திருக்க;   விற்கை     வடவரை    பாங்கு   நிற்ப -
வில்லைத்தாங்கிய கையை உடைய மேருமலை பக்கத்திலே நிற்க;
கார்க்கடல் கமலம் பூத்ததென - கரிய   நிறக்கடல்   ஒன்று,
தாமரை மலர்கள் மேலே மலர்திருந்தது போல; பொலிவானைக்
கண்டான்
- பொலிந்து   விளங்கும்  இராமபிரானை   வீடணன்
பார்த்தான்.
 

மற்கடம்-வானரம் இங்கு எதுகை நோக்கி 'மார்க்கடம்' என
வந்தது. வெண்மை நிறம் வாய்ந்த வானரங்கள்  இராமபிரானைச்
சூழ்ந்து நிற்பது பாற்கடல் சூழ்ந்திருப்பதைப்  போன்றிருக்கிறது.
வில்லேந்திக் காத்து நிற்கும்   பொன்மேனியனான இலக்குவன்
நிற்பது பொன்மலை நிற்பது போலத்   தோன்றுகிறது.  கருமை
நிறமான கடல் ஒன்று.  இடையிடையே தாமரை மலர்ந்திருக்கக்
காணப்படுவது போல இராமபிரான் இடையே பொலிந்து காட்சி
தர வீடணன் கண்டான் என்பது கருத்து. 'கண்ணும், திருவாயும்
கையும் செய்ய  கரியவனை' என்ற சிலப்பதிகார வரியும், கரம்,
கண், கை,  கால்  செய்யானை' என்ற அஷ்டபிரபந்தப்பாட்டும்
நினைவு     கூரத்தக்கது.     இப்பாட்டு     அழகானதொரு
எழுத்தோவியமாகப் பொலிந்து விளங்குகிறது. நாமம்-புகழ். 
 

(129)
 

6494.

அள்ளி மீது உலகை வீசும் அரிக் குலச் சேனை

நாப்பண்,

தெள்ளு தண் திரையிற்று ஆகி, பிறிது ஒரு திறனும் 

சாரா

வெள்ளி வெண் கடலுள் மேல்நாள் விண்ணவர்

தொழுது வேண்ட.

பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு

பண்பினானை;

 

அள்ளி மீது உலகை வீசும்  - உலகத்தையே   கைகளால்
அள்ளி   எடுத்து   மேலே   வீசும்படியான  ஆற்றலை உடைய;
அரிகுலச் சேனை  நாப்பண்
- வானரச் சேனைக்கு மத்தியிலே;
தெள்ளு தண் திரையிற்றாகி - தெளிந்த, குளிர்ந்த அலைகளை
உடையதாய்;   பிறிது ஒருதிறனும் சாரா - வெண்மை நிறமன்றி
வேறு எந்த  நிறமும்  சேராத;   வெள்ளி   வெண்கடலுள் -
வெள்ளியைப் போல் ஒளிரும்   வெண்மையான   பாற்கடலிலே;
மேல்நாள் விண்ணவர்  தொழுது வேண்ட
- முன்பொருநாள்
தேவர்கள் எல்லாம் தொழுது