பக்கம் எண் :

272யுத்த காண்டம் 

வேண்டிக்கொள்ள; பள்ளி  தீர்ந்து   எழுந்தான்   என்ன
உறக்கம்   நீங்கி     அவர்களுக்கு   உதவுமாறு   எழுந்திருந்த
திருமாலைப் போல;   பொலிதரு   பண்பினானை - பொலிந்து
விளங்கும் தன்மை உடையவனை.
 

வானரசேனையின் வலிமை தோன்ற   'அள்ளி மீது   உலகை
வீசும்   அரிகுலச்   சேனை' என்றார். விபவத்திலும், வியூகத்தைப்
போன்றே இருந்தான்   என்பது   தோன்ற   'விண்ணவர் தொழுது
வேண்டப்   பள்ளி   தீர்ந்து   இருந்தான்   என்னப்   பொலிதரு
பண்பினானை"   என்றார்.   'விபவத்துக்கு    நாற்றங்கால் போலே
வியூகம்'   என்பர்   ஆன்றோர்.   விபவம்:   இராம,   கிருஷ்ண
அவதாரங்கள். வியூகம்-பாற்கடலில் பள்ளி கொண்டநிலை. 
 

(130)
 

6495.

கோணுதற்கு அமைந்த கோலப் புருவம்போல் 

திரையும் கூட,

பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த 

வைப்பில்.

காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை 

காட்டி.

வாணுதல் சீதை கண்ணின் மணி என 

வயங்குவானை;

 

கோணுதற்கு அமைந்த - வளைவதற்கு உரியதாய்; கோலப்
புருவம் போல்
- சீதாபிராட்டியின் அழகிய புருவங்களைப்போல;
திரையும் கூட- கடல் அலைகளும் பொருந்த; பூணுதற்கு இனிய
முத்தின்
- அணிவதற்குரிய அழகிய முத்துக்களைப் போல; பொலி
மணல் பரந்த வைப்பில்
- விளங்குகின்ற   மணல்   பரந்துள்ள
இடத்திலே; காணுதற்கினிய நீல வெண்மையில் -  பார்ப்பதற்கு
இனிமையுறக் காணப்படும்  நீளமான  வெண்மையின்   மத்தியில்;
கருமை காட்டி - கருமை நிறத்தைக் காட்டி; வாணுதல் சீதை -
ஒளிபொருந்திய நெற்றியை உடைய  சீதாபிராட்டியின்;  கண்ணின்
மணி என
- கண்ணின் கரு மணி   போல;   வயங்குவானை -
விளங்குகின்றவனை. 
 

கோணுதல்-வளைதல். புருவத்துக்கு அலை உவமை.  முத்துக்கு
மணல்   உவமை.  முத்துக்கள் பொலிந்த மணல் என்றுமாம். பரந்த
மணல்   வெளி. கண்ணின்  வெண்  விழிக்கு உவமை. இராமபிரான்
கண்ணின்