கருமணிக்கு உவமை. சீதாபிராட்டிக்கு இராமன் கண்மணி அனையான் என்பதைப் புலப்படுத்தும். |
(131) |
6496. | படர் மழை சுமந்த காலைப் பருவ வான், அமரர் |
| கோமான் |
| அடர் சிலை துறந்தது என்ன, ஆரம் தீர் |
| மார்பினானை; |
| கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்னக் |
| காசின் |
| சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தரத் தோளினானை; |
| |
பருவ வான்படர் மழை சுமந்த காலை- கார் காலத்து மேகம் படர்ந்த மழை நீரைச் சுமந்து வந்த போது; அமரர் கோமான் அடர் சிலை துறந்ததென்ன - இந்திரவில்லை நீக்கி நின்றது போல;ஆரம்தீர் மார்பினானை- மணியாரம் பூணாத மார்பை உடையவனை; கடர் கடை மத்தின்- பாற்கடலைக்கடைந்த மத்தான மந்தரமலையில் பொருந்திய; பாம்பு கழற்றியதென்ன - பாம்பாகிய வாசுகியைக் கழற்றியது என்று கூறும்படி; காசின் சுடர் ஒளிவலயம் - மணிகள் பதித்த மிகுந்த ஒளியை உடைய வாகுவலயம்; தீர்ந்த சுந்தரத் தோளினானை - நீங்கிய அழகிய தோள்களை உடையவனை. |
பருவவான் - கார்காலத்து மேகம். பல நிறம்கொண்ட தென்பதால் 'அடர்சிலை' என்றார். இந்திரவில் நீங்கிய மேகம் போல, மணியாரம் நீங்கிய மார்பனாக இராமன் காணப்பட்டான். பாம்பாகிய தாம்பு நீங்கிய மலை போன்ற தோள்களில் வாகுவலயம் இல்லாதிருந்தான். வாகுவலயமில்லாத நிலையிலும் தோள்கள் அழகுறத் திகழ்ந்தன என்பதால், 'சுந்தரத் தோள்' என்றார். தேனுடைய மலர் மகள் திளைக்கும் மார்பினில்,தானிடை விளங்கிய தகையின் ஆரம்தான், மீனொடு சுடர்விட விளங்கும் மேகத்து வானிடை வில்லென வயங்கித் தோன்றுமே. (கம்ப. 1217) சுந்தரத் தோள் அணி வலயம் தொல்லை நாள் மந்தரம் சுற்றிய அரவைமானுமே. (கம்ப. 1214) அணிந்த நிலையைக் கூறுவதும், அவையில்லாத நிலையை எடுத்துரைப்பதும் பொருந்துவதைக் காணலாம். |
(132) |
6497. | கற்றை வெண் நிலவு நீக்கி, கருணைஆம் அமிழ்தம் |
| காலும் |
| முற்றுறு கலையிற்று ஆய முழுமதி முகத்தினானை; |