| பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற, தான் |
| பெற்ற |
| சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற |
| சென்னியானை; |
| |
கற்றை வெண் நிலவு நீக்கி - தொகுதியான நிலவொளியை நீக்கிவிட்டு; கருணையாம் அமிழ்தம் காலும்- கருணையாகிய அமுதைப் பொழிகின்ற; முற்றுறு கலையிற்றாய - நிறைந்த கலைகளை உடையதாகிய; முழுமதி முகத்தினானை - முழுமதியைப் போன்ற முகத்தை உடையவனை; பெற்றவன் அளித்த மோலி - தந்தையாகிய தயரதன் தந்த மணி மகுடத்தை; இளையவன் பெற- தம்பியாகிய பரதன் அ டைய; தான் பெற்ற சிற்றவை பணித்த மோலி - தான் பெற்ற, தனது சிறிய தாயாராகிய கைகேயி கட்டளைப்படி அணிந்த சடைமுடி; பொலிகின்ற சென்னியானை - விளங்குகின்ற தலையை உடையவனை. |
இராமனது முகம் முழுமதி போன்றது. ஆனால், மதிக்குரிய நிலவொளியை நீக்கி, கருணையாகிய அமுதத்தைப் பொழியும் முழுமதி போன்ற முகம் என்பது தோன்றக் 'கற்றை வெண்நிலவு நீக்கி, கருணையாம் அமுதம் காலும் முற்றுறு கலையிற்றாய முழுமதி முகம்' என்றார். இல்பொருள் உவமை. கருணைபொழிதல் மதியினுக்கில்லை. நிலவொளி இராமன் முகத்துக்கில்லை. முற்றுறு கலை-நிறைந்த கலை. |
(133) |
6498. | வீரனை-நோக்கி, அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப, |
| கண்ணீர் |
| வார, நெஞ்சு உருகி, 'செங் கண் அஞ்சன மலை! |
| அன்றுஆகின்; |
| கார் முகில் கமலம் பூத்தது! அன்று, இவன் |
| கண்ணன் கொல்லாம்; |
| ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ?' |
| என்றான். |
| |
வீரனை நோக்கி - மாவீரனான இராமபிரானை (வீடணன்) பார்த்து; அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப - உடல் முழுதும் ரோமம் புளகமெய்த; கண்ணீர் வார - கண்களில் கண்ணீர் பெருக; நெஞ்சு உருகி - உள்ளம் உருகி; செங்கண் அஞ்சனமலை அன்று ஆகின் - அழகிய கண்களை உடைய இவன் அஞ்சன மலை போன்றவன் |