அவன் போற்றி வணங்கும் இராமனும், இளையவனும் இந்த உறங்குகின்ற வீரனுடன் பலநாள் போர் செய்ய வேண்டிவரும் என்று கணித்துவிடுகிறான், இது வியப்பினும் வியப்பே! ஓர் அம்பால் இராமன், வாலியின் உரம் கிழித்ததை நேரே கண்ட அனுமன். இராமனின் வன்மையை நன்கு எடையிட்டு அறிந்தவன் அனுமன். அதே அம்பை உடைய இராமனும், அவன் தம்பியும் சேர்ந்துகூடப் பலநாள் இவனுடன் உளைய உள்ள போர் உண்டு என்ற முடிவிற்கு அனுமன் வந்தான். இந்த வியப்பு மற்றொரு வகையிலும் வெளிப்படுகிறது. மூவுலகத்தையும் வென்றவன் என்றதால் அவன்மாட்டுப் பெருமதிப்பு வைத்திருந்தான். இப்பொழுது இந்திரசித்தனைப் பார்த்தவுடன் இப்படி ஒரு துணைவன் | இராவணனுக்குக் கிடைத்தவுடன் அவன் மூன்றுலகத்தையும் வென்றான் என்று வியப்பதில் ஒரு பொருளே இல்லை என்று கருதுகிறான் அனுமன். | ஊர்தேடு படலத்தில், இந்திரசித்தனை இவ்வாறு அறிமுகம் செய்த கவிஞன், பிணிவீட்டு படலத்தில் அனுமனோடு இந்திரசித்து போர் செய்வதை நமக்குக் காட்டுகிறான். அனுமனைப் பிணித்து இராவணனிடம் கொண்டு காட்டும்பொழுது, இந்திரசித்தனின் அறிவு திறத்தையும், பகைவரை மதிக்கும் பண்பினையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறான். தந்தையைப்போல் பகையைக் குறைத்து மதிக்கும் தவற்றை இந்திரசித்தன் செய்யவில்லை. | அடுத்தபடியாக இராவணன் மந்திரசபையில் இந்திரசித்தன் பேசுவதைக் காட்டுகிறான் கவிஞன். பின்னர் நாம் அவனைக் காண்பது நாகபாசப் படலத்தி லாகும். அதிகாயன் இறந்தான் என்ற செய்தி கேட்டுத் துயரத்தில் ஆழ்ந்து நிற்கும் இராவணனை இந்திரசித்தன் காணவருகிறான். அதிகாயன் இறந்த செய்தி அறிந்து, தந்தையிடம் சீறுகிறான் இந்திரசித்தன். பகைவர்களின் வன்மையைக் கரதூடனர் வதம் முதல் ஓரளவு அறிந்திருந்தும், அக்க குமாரனையும், அதிகாயனையும் இராவணன் போருக்கு அனுப்பியதே தவறு என்று ஏசுகிறான். இளம்பிள்ளைகளாகிய இவர்கள் இருவரையும் நீயே போருக்கு அனுப்பிப் பலி கடாவாக மாற்றினாய் என்ற கருத்தில், |
|
|
|