அதுவல்ல என்றால்; கார்முகில் கமலம் பூத்தது அன்று - கருமை நிற மேகம் கமலம் பூத்தது போன்றவன். அதுவுமல்ல எனின்; இவன் கண்ணன் கொல்லாம்- இத்தன்மை உடைய இவன் திருமால் தானோ; ஆர் அருள் சுரக்கும் - நிறைந்த அருளைப் பொழியும்; நீதி அற நிறம் - நீதியை உடைய அறக்கடவுளின் நிறம்; கரிதோ என்றான் - கருமை நிறமோ என வியந்துரைத்தான். |
இராமபிரானைத் தரிசித்த மகிழ்ச்சியால் வீடணன் உடல் ரோம புளகாங்கிதம் எய்தினான் என்பதை 'அங்கம் மென் மயிர் சிலிர்த்து' என்றார். மகிழ்ச்சி மிகுதியால் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் என்பதனை, "கண்ணீர் வார" என்றார். வார-பெருக. அழகான கண்களை உடைய அஞ்சனமலையோ என இராமனை நோக்கி வியந்து-அல்ல என்றான், நீலமேக மொன்று - தாமரை பூத்ததோ, அதுவுமல்ல. இவன் திருமாலேதான். நிறைந்த அருள் பொழியும் நீதியை உடைய தரும தேவதையின் நிறம் கருமையோ? என்று வியந்துரைத்தான். |
(134) |
6499. | 'மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க, |
| செம் மணி மகுடம் நீக்கி, திருவடி புனைந்த |
| செல்வன் |
| தம்முனார், கமலத்து அண்ணல் தாதையார், சரணம் |
| தாழ, |
| எம்முனார் எனக்குச் செய்த உதவி'என்று |
| ஏம்பலுற்றான். |
| |
மின்மினி ஒளியின் மாயும் - மின்மினிப் பூச்சியின் ஒளியைப் போலத் தோன்றி மறையும்படியான; பிறவியை வேரின் வாங்க - பிறவி நோயை அடியோடு நான் போக்கிக் கொள்ளவே; செம்மணி மகுடம் நீக்கி - சிவந்த மணிகள் பதித்த மணி மகுடத்தைத் துறந்து; திருவடி புனைந்த செல்வன் தம்முனார் - இவனது திருவடிகளைச் சிரத்தில் சூடிக்கொண்ட செல்வத்தை எய்திய பரதனுக்கு முன்னோனான இராமன்; கமலத்து அண்ணல் தாதையார் - தாமரை மலரில் வாழும் பிரமதேவனுக்கும் தந்தையான இராமபிரானுடைய; சரணம் தாழ - திருவடிகளில் வீழ்ந்து நான் வணங்குமாறு; எம்முனார் எனக்குச் செய்த உதவி - என் முன்னவனாகிய இராவணன் எனக்குச் செய்த உதவி இதுவாகும்; என்று ஏம்பலுற்றான் - என்று கூறி மகிழ்ச்சியுற்றான். |