பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 277

இராமபிரானை, வீடணன் பார்த்ததும் இவன் பிறவி நோயைப்
போக்கும் பெருமான் என்பதால்  இவனால்  அழியும்   அரக்கர்
அரிய தவம் செய்தவராவார் என எண்ணினான் என்பது கருத்து.
பிறவிப்   பெருங்கடல்    என்பார்     (குறள் 10)   வள்ளுவர்.
போக்கமுடியாததொன்று       என்பதால்         'பெருந்தவம் 
இயற்றினோர்க்கும் பேர்வரும்  பிறவி'   என்றான்.   இறைவனடி
சேர்ந்தவர்களே பிறவிக் கடலை  நீந்துவாராதலின்  இராமபிரான்
'பிறவி நோய்க்கு மருந்தென   நின்றான்'   என்றான். '  ஆச்ரித
விரோதிகளைத் தானே   தனது கைப்படக்  கொன்று  தீர்க்கும்'
விரதமுடையவன்   என்பதால் 'தானே  வடிக்கணை தொடுத்துக்
கொல்வான்   இருந்தனன்'   என்றான்.  எனவே   அரக்கர்கள்
பெருந்தவம் செய்தோராவார் என்பதை 'அரக்கர் எல்லை தீர்ந்த
அருந்தவம் உடையர்' என்றான். 
 

(136)
 

6501.

கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன்,

கல்லும்

மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை 

வள்ளல்

இரங்கினன் நோக்கும்தோறும், இரு நிலத்து

இறைஞ்சுகின்றான்;

வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து 

வீழ்ந்தான்.

 

கரங்கள்   மீச்சுமந்து   செல்லும்  கதிர்மணிமுடியன்-
இவ்வாறு எண்ணிய வீடணன் இருகைகளையும் உச்சி மீது சுமந்து
செல்லும் ஒளிவீசும் முடியை உடையவனாய்; கல்லும் மரங்களும்
உருக  நோக்கும் காதலன்
- கல்லும் மரங்களும் கூட உருகும்
படி  பார்க்கின்ற அன்புடையவனாய்; கருணை வள்ளல்- அருள்
மிகுந்த   வள்ளலாகிய   இராமபிரான்;  இரங்கினன் நோக்கும்
தோறும்
-  இரக்கம்   கொண்டு   பார்க்கும்   போதெல்லாம்; 
இருநிலத்து   இறைஞ்சுகின்றான்   -   நிலத்திலே  வீழ்ந்து
வணங்குபவனாய்; வரங்களின்  வாரியன்ன -   அடியார்க்கு
வேண்டும் வரம் வழங்கும் கடல் போன்றவனான இராமபிரானது;
தாளிணை வந்து வீழ்ந்தான் - திருவடிகளில் வந்து வீழ்ந்தான்.
 

மீ-மேலே, வீடணன் எல்லையற்ற அன்புடையவன் என்பதால்
'கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன்' என்றார்   'தாவர
சங்கமம் என்னும் தன்மைய   யாவையும்   இரங்கிடக்   கங்கை
எய்தினான்" என பரதனுடைய அன்பு நிலையை முன்பும் கூறுவது
(கம்ப. 303) நினைவு