பக்கம் எண் :

278யுத்த காண்டம் 

கூரத்தக்கது. இராமபிரான் இரங்கிப்  பார்க்கும்தோறும்  தரையிலே
வீழ்ந்து   வணங்கிய   வீடணனது   நிலை    அடிமைத்திறத்தை
விளக்கிற்று. வேண்ட  முழுதும்   தரும்   வரங்களின்   கடலாக 
விளங்கும்   திருவடிகளை   'வரங்களின்  வாரியன்ன  தாளிணை'.
என்றார். தாளிணை -இரண்டு   திருவடிகள்.   'நின்னில்   சிறந்த
நின்தாளிணை' என்ற பரிபாடல் ஒப்பு நோக்கத்தக்கது.
 

(137)
 

6502.

'அழிந்தது, பிறவி' என்னும் அகத்து இயல் முகத்துக்

காட்ட,

வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற

வணங்கினானை.

பொழிந்தது ஓர் கருணைதன்னால், புல்லினன் என்று 

தோன்ற,

'எழுந்து, இனிதுஇருத்தி' என்னா, மலர்க்கையால் 

இருக்கை ஈந்தான்.

 

அழிந்தது   பிறவி  என்னும் - அரக்கப் பிறவி அழிந்தது
என்று  (வீடணன்  நினைந்த); அகத்தியல் முகத்துக் காட்ட -
மனத்தின் இயல்பினை முகம்  காட்ட;   வழிந்த கண்ணீரின் -
கண்களில்   பெருகிய   கண்ணீரோடு;   மண்ணின்   மார்புற
வணங்கினானை
-   தரையிலே   மார்பு   பொருந்த வணங்கிய
வீடணனை;    பொழிந்ததோர்    கருணை    தன்னால் -
பெருகியதொரு கருணையாலே;  புல்லினன்   என்று தோன்ற-
தழுவினான் என்று தோன்றுமாறு  (அருளோடு பார்த்து); எழுந்து
இனிது இருத்தி என்னா
-  எழுந்திருந்து, இனிதே அமர்வாயாக
என்று; மலர்க்கையால்  இருக்கை ஈந்தான் -   தனது  மலர்
போன்ற கைகளாலே அவனுக்கு இருப்பிடம் தந்தான்.
 

இராமபிரானது தாளிணையில் வீழ்ந்த வீடணன்    'அரக்கப்
பிறவி அழிந்தது' என நினைந்த அவனது மனத்தின் தன்மையை
முகம் காட்டித்தர, கண்களில் பெருகிய கண்ணீரோடு, தரையிலே
மார்பு படும்படி வணங்க, அவ்வாறு   வணங்கிய    வீடணனை,
கருணை   பொங்கப்   பார்த்த    இராமன் தழுவினான் என்று
தோன்றுமாறு எழுந்து இங்கு இனிதே இருப்பாயாக என்று கூறித்
தனது மலர்   போன்ற   கையால்  இருப்பிடம்   காட்டினான்.
அடுத்ததுகாட்டும்  பளிங்கு போல் நெஞ்சங் கடுத்தது காட்டும்
முகம்" (குறள் 76)   என்ற    குறளுரைக்கேற்ப   'அகத்தியல்
முகத்துக்காட்ட'  என்றது   கருதத்தக்கது.   'பிறவி  நோய்க்கு
மருந்தென   நின்றான்'   என்று  முன்பே நினைந்ததற்கேற்ப '
அழிந்தது பிறவி' எனக் கருதிக் கூறப்பட்டது பொருந்தும்.

(138)