நடந்தவற்றை அறிந்துகொண்ட இந்திரசித்தன் ஒருவாறு இலக்குவன் ஆற்றலை எடையிட்டுக் கொண்டான். எனவே, சாதாரணத் தேவர்களோடு புரிந்த போர்களில் பயன்படுத்திய அம்புகளை, இப்பொழுது புறக்கணித்துவிடுகிறான். இரண்டு முக்கியமான கணைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். இந்த இரண்டும் தேவர்கள் முதலானவர்களோடு செய்த போரில் பயன்படுத்தப்படாதவை. எனவே ஆழ்ந்த சிந்தனையுடன் "பாம்பின் படையும், பாசுபதத்தினோடு" (8013) இதுவரை பாதுகாத்து வைத்திருந்தேன். அதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் வந்துவிட்டது என்றால், இலக்குவனைப் பாராமலேயே இந்த இரண்டும் அவனுக்குரியவை என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இதன் மூலம் பகைவனைத் துல்லியமாக எடை இடும் இந்திரசித்தின் அறிவுத் திறத்தை அறிந்துகொள்ளச் செய்கிறான் கம்பன். இராவணன் சீதையைக் கவர்ந்த செயலை இந்திரசித்தன் மனம் ஒப்பி ஏற்கவில்லை என்றாலும், தந்தைக்காகப் போர்புரிய வேண்டும் என்று இதுவரை நினைத்திருந்தான். தன் அருமைத்தம்பி அதிகாயனை இலக்குவன் கொன்றுவிட்டான் என்று கேள்விப்பட்டவுடன், இந்திரசித்தன் சினம் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மீதூர்ந்து செல்கிறது அதனால் தந்தையை நோக்கி, |