பக்கம் எண் :

47   யுத்த காண்டம்

நோக்கம்  எதுவுமில்லை.  அக்க   குமாரனை அனுமன் கொன்றது
உண்மை    என்றாலும்,   அவனைப்  பழிவாங்க நினைக்கவில்லை.
ஆனால், அதிகாயன் இறந்தபிறகு, அதுவும் தான் இதுவரை காணாத
இலக்குவனால் அச்செயல் நிகழ்ந்தது என்றவுடன் தன் இன மானம்
காக்க,     இலக்குவனை  ஒழித்தே தீரவேண்டும் என்ற  எண்ணம்
இந்திரசித்தனை முழுவதுமாக ஆட்கொண்டது.
  

போர்க்களத்தில்  வருகின்ற இந்திரசித்தனைப் பார்த்து,  'இவன்
யார்'  என்று வீடணனைக் கேட்கிறான். வீடணன் கூறிய   இரு வரி
விடை சிந்திக்கவேண்டிய தாகும்.
 

'ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர்' என்றான்.

(8029)
 

இலக்குவன் வினாவிற்கு மிகச் சிறந்த முறையில் விடை அளித்த
வீடணன், மிக்க பய பக்தியோடு இலக்குவனுக்கு அவன்  கேளாமல்
இருக்கையிலும்    சில    அறிவுரைகளைக் கூறத்  தொடங்குகிறான்.
இலக்குவனைப்      பொறுத்தமட்டில் அதிகாயனை   வென்றுவிட்ட
காரணத்தால், ஒரு வேளை இந்திரசித்தையும்   அதேபோல எளிதாக
வெல்லலாம்   என்று   நினைத்திருக்கக்கூடும்  என்று    வீடணன்
கருதியதால், இந்த அறிவுரையினைக் கூறுகிறான். அப்படி ஒருவேளை
இலக்குவன் நினைத்துவிட்டால் அது  பேராபத்தில்   முடியும் என்று
வீடணன் கருதினான். ஆதலாலும், இவ்வறிவுரைகளைக் கூறினான்.
 

"எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று - எம்பிரான்!
கண் அகன் பெரும்படைத் தலைவர் காத்திட,
நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது
திண்ணிதின் உணர்தியால், தெளியும் சிந்தையால்.

(8030)
 

"மாருதி, சாம்பவன், வானரேந்திரன்,
தாரை சேய், நீலன் என்று இனைய தன்மையார்,
வீரர், வந்து உடன் உற, - விமல! - நீ நெடும்
போர் செயத் தகுதியால் - புகழின் பூணினாய்!

(8031)