உடலினை நோக்கும்- (அப்போது இராமபிரான்) சீதையின் பிரிவால் மெலிந்து போன தனது உடலைப் பார்த்தான்; இன் உயிரை நோக்கும் - தனது இனிய உயிர் போன்றவளாகிய சீதாபிராட்டியை மனதால் நினைத்தான்; இடரினை நோக்கும்- அப்பிராட்டிக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்தான்; மற்று யாதும் நோக்கலன் - வேறெதுவும் எண்ணாதவனாயிருந்தான்; கடலினை நோக்கும் - தன்னெதிரே உள்ள கடலைப் பார்ப்பான்; அக்கள்வன் வைகுறும்- சீதையைக் கவர்ந்து சென்ற கள்வனாகிய இராவணன் தங்கியிருக்கும்; திடரினை நோக்கும் - இலங்கையாகிய திட்டைப் பார்க்கிறான்; தன் சிலையை நோக்கும் - தன் கையிலிருக்கும் வில்லையும் பார்த்துக் கொள்கிறான். |
இராமபிரான் உடல் என்றால் சீதாபிராட்டி உயிர்; எனவேதான் தன் உடலைப் பார்த்தவன் இனிய உயிரான பிராட்டியை நினைவு கூர்ந்தான்; பின் பிராட்டிக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணுகிறான். தனக்கும் - சீதைக்கும் இடையே பரந்து கிடக்கும் கடலைப் பார்க்கிறான். அக்கடல் நடுவே, சீதையைக் கவர்ந்து சென்ற கள்வனாகிய இராவணன் தங்கியிருக்கும் இலங்கை என்னும் ஒரு திட்டைப் பார்க்கிறான். இராவணனைக் கொன்று, சீதையைச் சிறை மீட்க உதவச் சித்தமாயுள்ள தனது வில்லைப் பார்க்கிறான். சீதையைப் பிரிந்து வருந்தும் இராமபிரானது நிலையைப் படிப்பவர் உள்ளத்தில் நன்கு பதியும் படி - எளிய சொற்களால் - உணர்ச்சிப் பெருக்கை வெளியிடும் பாடல் இது. 'மால்' இரண்டிடத்தும் அசை நிலை. இராமபிரானது கண்களுக்கு இலங்கை மாநகர் ஒரு சிறிய திடலாகத்தான் தோன்றியதாம் சிலை - வில். |
(11) |
6527. | பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால், |
| பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான், |
| அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி |
| மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ? |
| |
பணி ப ழுத்து அமைந்த பூண் - வேலைப்பாடு நிரம்பிப் பொருந்திய அணிகலன்களை அணிந்துள்ள; அல்குல் பண்பினால் - அல்குலையுடைய சீதா பிராட்டியின் சிறந்த பண்புகளை நினைத்துப் பார்ப்பதால்; பிணி பழுத்து அமைந்ததோர்- காமநோய் முதிர்ந்து அமைந்தமையால் உண்டானதொரு; பித்தின் உள்ளத்தான்- பித்துப் பிடித்தது போன்ற மனத்தை உடைய இராமபிரான்; அணி பழுத்து அமைந்த - அழகு பழுத்து |