பக்கம் எண் :

296யுத்த காண்டம் 

அமைந்ததாகிய;   முத்து   அரும்பு  செம்மணி - முத்துக்கள்
அரும்பிய சிவந்த  மணி போன்ற; மணி பழுத்து அமைந்தவாய்
- அழகு நிறைந்து விளங்கும்   சீதாபிராட்டியின்   திருவாயினை;
மறக்க   வல்லனோ -   மறக்கும்  வல்லமை உடையவனோ?
வல்லன்.
 

சீதாபிராட்டியின்   சிறந்த   குண   நலங்களை எப்போதும்
நினைத்திருப்பதால் காம நோய்  முதிர்ந்து   பித்துப்  பிடித்தது
போன்ற மனத்தை உடைய இராமபிரான் முத்தரும்பிய செம்மணி
போன்ற அழகிய சீதா பிராட்டியின் வாயை மறக்கவல்லனல்லன். 
  

(12)
 

சுக்கிரீவன், இராமபிரானிடம் வீடணனோடு மேல் விளைவது
குறித்து எண்ணுக எனல்
 

6528.

ஆயது ஓர் அளவையின், அருக்கன் மைந்தன், 'நீ
தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை;
மேயவன்தன்னொடும் எண்ணி, மேல் இனித்
தூயது நினைக்கிலை' என்னச் சொல்லினான்.
 

ஆயதோர் அளவையின் - (சீதையின் நினைவால் இராமன்
வருந்திய) அத்தகைய   நேரத்திலே;  அருக்கன்   மைந்தன்-
சூரியகுமாரனான   சுக்கிரீவன்   (இராமபிரானை    நோக்கி); நீ
தேய்வது என்
- (பெருமானே) நீ இவ்வாறு வருந்தித்  தேய்வது
என்ன   பயனைக்   கருதி;   காரியம்  நிரப்பும் சிந்தையை
-   செய்யவேண்டிய காரியங்களை எண்ணி நிறைவேற்றத் தக்க
சிறந்த மனத்தை   உடையவன்   நீ   (ஆதலின்);   மேயவன் 
தன்னொடும்   எண்ணி 
- நம்மை நாடி வந்துள்ள இலங்கை
வேந்தனான   வீடணனுடன்   கலந்து சிந்தித்து; மேல் இனித்
தூயது  நினைக்கிலை 
- இனிமேல் நடக்க வேண்டிய நமக்கு
நன்மைதரும்  செயல்களை  நினைக்காமலிருக்கிறாயே; என்னச்
சொல்லினான்
- என்று இராமபிரானிடம் கூறலானான்.
 

இராவணனைவென்று,   சீதாபிராட்டியை  மீட்கும் செயலை
"தூயது" என்றான். இராமபிரான், செயற்கரியன செய்து முடிக்கும்
மன   வலிமை   உடையவன்   என்பதை   "காரியம்  நிரப்பும்
சிந்தையை" என்றான். 
 

(13)
 

6529.

அவ்வழி, உணர்வு வந்து, அயர்வு நீங்கினான்,
'செவ் வழி அறிஞனைக் கொணர்மின், சென்று' என,