பக்கம் எண் :

298யுத்த காண்டம் 

6531.

எழுதலும், 'இருத்தி' என்று இராமன் ஏயினான்,
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்பினால்
தொழுது உயர் கையினான், தெரியச் சொல்லினான்:
 

எழுதலும்- (இராமன் கேட்டவைகளுக்கான   விடை   கூற
வீடணன்) எழுந்தான், அவ்வாறு எழலும்; முழுதுணர் புலவனை
- முற்றும்   உணர்ந்த அறிஞனான வீடணனை;'இருத்தி' என்று
இராமன்   ஏயினான்
-   (உட்கார்ந்தே   பேசலாம்   என்ற
எண்ணத்தால்)   இருப்பாயாக   என்று இராமபிரான் கூறினான்;
முளரிக்   கண்ணினான் 
-    தாமரை    மலர்   போன்ற
கண்களைஉடைய  இராமபிரான்; பழுதற வினவிய பொருளை
- குற்றம் நீங்கக்   கேட்ட   பொருள்களைப்  பற்றியெல்லாம்;
பண்பினால்     தொழுதுயர்  கையினான்
-   பண்போடு,
தொழுதுயர்த்திய   கைகளை     உடையவனாக;    தெரியச்
சொல்லினான்
- இராமபிரான்   நன்கு   தெரிந்து   கொள்ள
கூறுவானாயினான்.
 

போர்   மேற்கொண்டு     செல்லுதற்குமுன்   பகைவனது
வலிமையை   ஆராய்ந்து   அறிதல்    வேந்தர்க்குரிய கடமை
என்பதால் 'பழுதற   வினவிய பொருள்' என்றார். சொல்லுதலில்
கேட்பவர்க்குத்   தெளிவு     வேண்டுமென்பதால்   "தெரியச்
சொல்லினான்" என்றார். 
 

(16)
 

இலங்கையின் அரண்
 

6532.

'நிலையுடை வட வரை குலைய நேர்ந்து, அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும் முடி வாங்கி, ஓங்கு நீர் 
அலை கடல் இட்டனன், அனுமன் தாதையே. 
 

அனுமன்தாதை - அனுமானுடைய தந்தையாகிய வாயுதேவன்
(காற்று);   நிலையுடைவடவரை -   நிலைத்ததன்மை   கொண்ட
வடமேருமலையை;     குலைய   நேர்ந்து  -   நிலைகுலைந்து
சிதையும்படி செய்ய நினைத்து;  அதன் தலை என   விளங்கிய
- அந்தவடமலையின்    முடி   என்று     திகழ்ந்த;   தமனியப்
பெருமலையினை
- பொன்மயமான  பெரிய   மேரு   மலையை;
மும்முடிவாங்கி - மூன்று சிகரங்களைப் பறித்து   வாங்கி; ஓங்கு
நீர் அலைகடல் இட்டனன்
- நிறைந்த   நீரையுடைய கடலிலே
இட்டான்.