6536. | 'மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு |
| ஏற்றமும் உள, அவர்க்கு இரண்டு கோடி மேல்; |
| கூற்றையும் கண்-பொறி குறுகக் காண்பரேல், |
| ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்பரால். |
| |
மேல்திசை வாயிலில் வைகும்- இலங்கை மாநகரின் மேற்குத் திசை வாயிலைக் காவல் புரிந்து தங்கியுள்ள; வெய்யவர்க்கு ஏற்றமும் உள- கொடியவர்களுக்குச் சில தனியான மேன்மைகளும் உண்டு; அவர்க்கு இரண்டு கோடி மேல் - வடதிசை வாயிலில் உள்ளவர்களை விட இரண்டு கோடி அதிகம் (எனவே இவர்கள் 12 கோடி பேர்); கூற்றையும் கண்பொறி குறுகக் காண்பரேல்- எமனையும் கூட கண்ணைச் சிறிதே குறுக்கிப் பார்ப்பாரென்றால்; ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்பர்- ஊறுகின்ற இரத்தத்துடன் உயிரையும் உண்டு விடுவார்கள். |
வடதிசை வாயில் காவலர்களை விடவும், மேற்றிசைக் காவலர்களுக்குச் சில மேன்மைகள் உண்டு என்பார் 'வெய்யவர்க்கு ஏற்றமும் உள' என்றார். அவர்களை விட இரண்டு கோடி அதிகம் என்பதொரு ஏற்றம். அது தவிர இவர்கள் கண்களைச் சிறிதே திறந்து குறுக்கிப் பார்க்கும் பார்வையிலேயே கூற்றுவனுடைய இரத்தத்தோடு உயிரையும் உண்டு விடுவார்கள் என்பது கருத்து: கட்பொறி - கண்ணாகிய இந்திரியம். பரமன் கண்ணைச் சிறிது விழித்தாலும் பெருகும் கருணையால் உலகம் வாழும் 'செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ" என்பது கோதையார் வாக்கு. அதுபோல வெய்யவர் சிறிதே விழித்தாலும்துன்பம் விளையும். மேலும் மேலும் ஊறும் இரத்தத்தை ஊற்றுறு குருதி" என்றார். கூற்று - எமன்; உடலையும் உயிரையும் கூறுசெய்பவன். |
(21) |
6537. | 'தென் திசை வாயிலின் வைகும் தீயவர் |
| என்றவர் எண்-இரு கோடி என்பரால்; |
| குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்? |
| வன் திறல் யமனையும் அரசு மாற்றுவார். |
| |
தென்திசை வாயிலின் வைகும் தீயவர் - தென்திசை வாயிலைக் காவல் புரியும் தீயவர்கள்; என்றவர் எண் இரு கோடி என்பரால்- என்று கூறப்படுபவர் பதினாறு கோடிப் பேர் என்பார்கள்; குன்று உறழ் நெடியவர்- மலைக்கு நிகரான நெடிய உடலினர்; கொடுமை கூறி என் - இவர்களது கொடியசெயலை என்னவென்று கூறுவது; வன்திறல் யமனையும் - வலிய திறத்தை |