பக்கம் எண் :

302யுத்த காண்டம் 

உடைய எமனையும் கூட; அரசு மாற்றுவார்- ஆட்சியை மாற்றித்
தாமே ஆள வல்லவராவார்.
 

வலிய அவர்களது கொடுஞ் செயல் கூறும் தரமல்ல என்பார்
"கொடுமை   கூறி   என்" என்றார். 'அரசு மாற்றுவார்' என்பதற்கு
அரசை அழிக்க வல்லவர் என்று கூறினும் பொருந்தும். மாற்றுதல்
- அழித்தலாம். 
 

(22)
 

6538.

'கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர்
ஈட்டமும் எண்-இரு கோடி என்பரால்;
கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும்

தாள் துணை பிடித்து, அகன் தரையின் எற்றுவார்.

 

கீழ்த்திசை   வாயிலின்   வைகும்    கீழவர்- கிழக்குத்
திசையிலுள்ள  வாயிலில்   காவல்   புரிந்திருக்கும்   கீழ்மக்கள்;
ஈட்டமும்   எண்இரு   கோடி   என்பரால் -   கூட்டமும் 
பதினாறுகோடி;   கோட்டு   -    வலியதந்தங்களை   உடைய;
இருந்திசை   நிலை -  அகன்ற எட்டுத் திசைகளிலும் நிலைத்து
நிற்கும்;  கும்பக் குன்றையும்- மத்தகத்தையுடைய மலைபோன்ற
திக்கு  யானைகளையும்; தாள் துணை பிடித்து- அவற்றின் இரு
கால்களையும் பிடித்துத் தூக்கி; அகன்   தரையின்  எற்றுவார்
- தரையிலே மோதியடித்துக் கொல்லும் வல்லமை உடையவர்கள்;
அகன்தரை-அகன்ற தரையிடம்.
 

'கீழ்த்திசை' என்பது  எதுகை  நோக்கி   'கீட்டிசை"   எனத்
திரிந்தது. கும்பம் - மத்தகம். திக்கு  யானைகளின்   கால்களைப்
பிடித்து, மேலே   தூக்கித்   தரையில்   மோதிக்   கொல்லவும்
வல்லவர்கள் என்பது கருத்து. 
 

(23)
 

6539.

'விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
எண்-இரு கோடியின் இரட்டி என்பரால்;
மண்ணிடை வானவர் வருவர் என்று, அவர்
கண் இலர், கரை இலர், கரந்து போயினார்.
 

விண்ணிடை   விழித்தனர்     நிற்கும்   வெய்யவர்
- வானத்திலே   தேவர்கள் வரக்கூடும் என்பதால் உறங்காமல்
கண் விழித்தவர்களாக நின்று காவல் புரியும் கொடியவர்; எண்
இரு  கோடியின் இரட்டி என்பரால்
- பதினாறு கோடியின்
இரண்டு   மடங்கான   முப்பத்திரண்டு   கோடி என்பார்கள்;
மண்ணிடை  வானவர் வருவர் என்று
- மண்ணுலகத்துக்கு
தேவர்கள் வருவார் என்று கருதி;