கண்ணிலர் - ஒரு சிறிதும் கண்ணோட்டம் இல்லாதவர்களாய்; கரந்து போயினார்- தமது வடிவத்தை மறைத்துக் கொண்டு, வேறு வடிவத்திலே உலாவுபவர்கள்; கரை இலர் - அளவற்றவராவர். |
நான்கு திசையிலும் வாயில்களைக் காவல் காப்பவர்களைத்தவிர, விண்ணிலும் நின்று காவல் புரிந்தனர். கண் - கண்ணோட்டம். சிறிதும் கண்ணோட்டமில்லாத கொடியவர்கள் என்பதால் 'கண்இலர்' என்றார்; இரக்கம் சிறிதுமில்லாதவர்கள் என்பது பொருள். தேவர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்குப் புலனாகாதபடி வடிவத்தை மறைத்து, வேறு வடிவத்திலே இருந்தனர் என்பதால் 'கரந்து போயினார்' என்றார். |
(24) |
6540. | 'பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும், |
| உறங்கலர், உண் பதம் உலவை ஆதலால், |
| கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல், |
| அறைந்துளது ஐ-இரு நூறு கோடியால். |
| |
பிறங்கிய நெடுமதில் - விளங்கித் தோன்றும் அந்த நீண்ட மதிலின்; பின்னும் முன்னரும்- பின்புறத்திலும், முன்புறத்திலுமாக; உறங்கலர் - சிறிதும் உறங்காதவராய்; உண்பதம் உலவை ஆதலால்- அவர்கள் உண்ணும் உணவு காற்று ஆதலால்; கறங்கெனத் திரிபவர்- அந்தக் காற்றை நாடிக் காற்றாடி போலத் திரிவார்கள்; கணக்கு வேண்டுமேல் - அவர்களது எண்ணிக்கை வேண்டுமானால்; அறைந்துளது ஐயிரு கோடி - நூறு கோடி என்று சொல்லப்பட்டுள்ளது. |
பதம் - உணவு. உலவை - காற்று. கறங்கு - காற்றாடி. காற்றாடியைப் போலச் சுழன்று திரிந்த காவலர்களின் செயலுக்குக் காரணம் கூறுபவரைப் போல "உண்பதம் உலவை ஆதலால் கறங்கெனத் திரிபவர்" என்றார். |
(25) |
6541. | 'இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி |
| ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ? |
| மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர் |
| முப்பது கோடியின் மும்மை முற்றினார். |
| |
இப்படி மதில் ஒரு மூன்று - இத்தகைய கட்டுக் காவலை உடைய மதில்கள் மூன்றாகும்; வேறு இனி ஒப்பரும் பெருமையும்- இதை விட வேறாக அந்த மதில்களின் ஒப்பற்ற பெருமையை; உரைக்க வேண்டுமோ - விரிவாகக் கூறவும் வேண்டுமோ?; மெய்ப் |