பெரும் திருநகர் - உண்மையான பெருமைமிக்க அந்த அழகிய இலங்கை நகரை; காக்கும் வெய்யவர் - காவல் காக்கும் கொடியவர்கள்; முப்பது கோடியின் மும்மை முற்றினார்- தொண்ணூறு கோடிபேர் என நிறைந்துள்ளனர். |
இப்படி, மேலே கூறியபடி, உண்மையாகவே இலங்கை பெருந்திருநகர் என்பார் 'மெய்ப் பெரு' என்றார். இலங்கை அழகிய நகராதலின் 'திருநகர்' என்றார். 'பிறந்த ஊர்' என்பதாலும் வீடணன் 'திருநகர்' எனச்சிறப்பித்துக் கூறினானென்க. முப்பது கோடியின் மும்மை - முப்பது கோடியின் மூன்று மடங்கு. முற்றுதல். நிறைதல். |
(26) |
6542. | 'சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார், |
| அறப் பெரும் பகைஞர்கள், அளவு இல் ஆற்றலர், |
| உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர், |
| இறப்பு இலர், எண்-இரு நூறு கோடியே. |
| |
சிறப்பு அவன் செய்திட- அந்த இராவணன் சிறப்புச் செய்ய; செல்வம் எய்தினார்- அவனால் செல்வம் அடைந்தவர்களும்; அறப்பெரும் பகைஞர் - அறத்துக்குப் பெரிய பகைவர்களாய் உள்ளவர்களும்; அளவு இல் ஆற்றலர் - அளவில்லாத வலிமை உடையவர்களும்; உறப் பெரும் பகை வரின் - அந்த இராவணனுடன் போரிடப் பெரும்பகைவர் வருவாராயின்; இறப்பிலர் - எப்போதும் இராவணனது கட்டளையை மீறாதவர்களுமானவர்கள்; எண் இரு கோடியே - பதினாறு கோடி பேராவார். |
சிறப்பு: பெருமை. இராவணனால் சிறப்புப் பெற்றுச் செல்வம் எய்தியவர்கள். "பகை உறவரின்" பகைவர் யாரேனும் இராவணனுடன் போரிட வந்தால்; உடனே அவனுக்கு உதவும் உண்மையானவர்கள் என்பதால் 'உதவும் உண்மையர்' என்றார். |
(27) |
கோயில் வாயிலின் காவலர் |
6543. | ' "விடம் அல, விழி" எனும் வெகுளிக் கண்ணினர், |
| "கடன் அல, இமைத்தலும்" என்னும் காவலர், |
| வட வரை புரைவன கோயில் வாயிலின் |
| இடம் வலம் வருபவர், எண்-எண் கோடியால். |
| |
விடம் அல விழி எனும்- இவை விடம் அல்ல விழிகள்தான் என்று கூறும்படி; வெகுளிக் கண்ணினர்- கோபம் மிக்க கண்களை |