பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 305

உடையவர்கள்;   இமைத்தலும்   கடன்  அல  -   கண்களை
இமைப்பதும்    நமது  கடமையல்ல; என்னும் காவலர் - என்று
கூறும்படி காவல்   காப்பவர்கள்;  வட  வரை  புரைவன - வட
வரையான   மேரு   மலையைப்    போன்றனவாகிய;   கோயில்
வாயிலின்
- இராவணனுடைய  அரண்மனை   வாயிலில்;   இடம்
வலம்    வருபவர்
-     இடதுசாரி,     வலது     சாரியாகத்
திரிந்துவருகின்றவர்கள்; எண்ணெண் கோடி-   அறுபத்து நான்கு
கோடிப் பேராவர்.
 

கோபம்   கொண்டு விழிக்கும் காவலர்களின் கண்கள் விடம்
போன்ற   கொடியவை    என்பதால் 'விடம் அல விழி' என்றார்.
காவல் புரிபவர் கண்களை   இமைத்தலும்   கடமைதவறியதாகும்
என்பதால் "கடன் அல இமைத்தலும்"   என்றார்.    வடவரை -
மேருமலை. கோயில் - அரண்மனை. 
 

(28)
 

6544.

'அன்றியும், அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்.
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்;
குன்றினும் வலியவர்; கோடி கோடியால்.
 

அன்றியும் அவன் அகன் கோயில் - அல்லாமலும் அந்த
இராவணனுக்குரிய விசாலமான    அரண்மனையில்;   ஆய்மணி
முன்றிலின்
- ஆராய்ச்சி மணி  கட்டப்பட்டுள்ள   முற்றத்திலே;
வைகுவார் முறைமை கூறிடின்
- தங்கிக் காவல் புரிபவர்களின்
தன்மையைக் கூறுவோமாயின்; ஒன்றிய உலகையும்   - ஒன்றாக
உள்ள உலகத்தை எல்லாம்; எடுக்கும் ஊற்றத்தார்   -   தமது
கைகளால் தூக்கவல்ல  ஆற்றல்   உள்ளவர்களும்;   குன்றினும்
வலியவர்
- மலையினும் வலிமைமிக்கவர்களும் ஆகிய வீரர்கள்;
கோடி கோடியே - கோடி கோடிப் பேராவர்.
 

அரசர்கள்  வாழுமிடமும் 'கோயில்' என்பது மரபு. ஆய்மணி
-   ஆராய்ச்சிமணி,   அரசர்களின்    அரண்மனை   வாயிலில்
ஆராய்ச்சி மணி கட்டுதல்   உண்டென்பது 'வாயிற்கடைமணி நடு
நா நடுங்க' எனவரும் சிலப்பதிகார உரையால் புலப்படும். 
  

(29)
 

படைகளின் அளவு
  

6545.

'தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக்
கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து