என்பதால் 'ஆழியாய்' என்றான். சக்கரப் படையுடைய திருமால் என்ற நினைப்பிலே கூறியதுமாம். உலகமுள்ள நாளெலாம் அழித்தாலும் அழித்துக் கொண்டே இருக்கலாம் என்பதை 'நாளெலாம் தேயினும் தேய்க்க வேண்டுவது' என்றான். |
(31) |
இராவணன் துணைவர் பெருமை |
6547. | 'இலங்கையின் அரண் இது; படையின் எண் இது; |
| வலங் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய |
| அலங்கல் அம் தோளவன் துணைவர், அந்தம் இல் |
| வலங்களும் வரங்களும், தவத்தின் வாய்த்தவர். |
| |
இலங்கையின் அரண் இது- இலங்கை மதிலின் பெருமை இது; படையின் எண் இது - படைகளின் எண்ணிக்கை இது; வலங்கையில் வாள்- இராவணன் தனது வலது கையிலே தாங்கியுள்ளவாள்; சிவன் கொடுக்க வாங்கிய- சிவபிரான் தரப் பெற்றுக் கொண்ட; அலங்கல் அம் தோளவன் - வெற்றி மாலை சூடிய அழகிய தோள்களை உடைய இராவணனது; துணைவர் - தம்பிமார்கள்; அந்தம் இல்வலங்களும்- அழிவில்லாத வலிமைகளும்; வரங்களும் - பலவகையான வரங்களும்; தவத்தின் வாய்த்தவர் - தாம் செய்த தவ பலத்தாலே வாய்க்கப் பெற்றவராவர். |
தாம் செய்த தவ பலத்தாலே வாய்க்கப் பெற்றவராவர். சிவபிரான் தந்த 'சந்திரகாசம்' என்ற வாளை வலது கையில் கொண்டவன் என்று இராவணன் தவச் சிறப்பின் வழிவந்த வலிமையையும் குறிப்பிட்டான். |
(32) |
கலித்துறை |
6548. | 'உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் |
| உடையான், |
| சுகம் பல் போர் அலால் வேறு இலன், பெரும் படைத் |
| தொகையான், |
| நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் |
| அனையான். |
| அகம்பன் என்று உளன்; அலை கடல் பருகவும் |
| அமைவான். |