பக்கம் எண் :

308யுத்த காண்டம் 

உகம்   பல் காலமும் தவம் செய்து - பலயுகங்கள் தவம்
செய்து;   பெருவரம்   உடையான் -    பெரிய  வரங்களைப்
பெற்றிருப்பவனும்; சுகம்   பல்போரலால்   வேறிலன்- பல
போர்களைச்   செய்வதை   விட   வேறு  இன்ப மில்லாதவனும்;
பெரும்படைத் தொகையான்- பெரிய படையை   உடையவனும்;
நகம் பல் என்றிவை இல்லதோர்- நகம், பல் என்பவைகளைப்
பெற்றிருக்காத   ஒரு;   நரசிங்கம் அனையான்- நரசிங்கத்தைப்
போன்றவனும் ஆன; அகம்பன் என்றுளன் - ' அகம்பன்' என்ற
பெயர் கொண்ட ஒரு அரக்கர்தலைவன் உள்ளான்;  அலை கடல்
பருகவும்  அமைவான்  
-  அலைகளை   உடைய   கடல்நீர்
முழுவதையும் குடிக்கவும் வல்லவன்.
 

அகம்பன் இராவணனுக்கு மாமன்முறைதான். 
 

(33)
 

6549.

'பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும்,
உருப்ப விற் படை, ஒன்பது கோடியும் உடையான்,
செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து

செறுத்த

நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு

நெடியோன்.

 

பொருப்பை மீதிடும் - மலைகளையும் மீதிட்டுச்  செல்லும்;
புரவியும் பூட்கையும் தேரும் - குதிரைகளும்,    யானைகளும்,
தேர்களும்; உருப்ப விற்படை - சினம் மிக்க  விற்படையினரான
காலாட்படை வீரர்களும்;  ஒன்பது   கோடியும்   உடையான்-
ஒன்பது      கோடியை உடையவனும்; வானிடை  செருப்பெய்
சினக்கடாய்
- வானத்திலே  போர்புரிந்த   சினம்மிக்க  ஆட்டுக்
கடாவினை; கடாய் வந்து செறுத்த - வாகனமாகச்   செலுத்தி
வந்து போரிட்ட; நெருப்பை வென்றவன் - அக்கினி  தேவனை
வென்றவனும்; நிகும்பன் என்று உளன் ஒரு   நெடியோன் -
சிறந்த வீரனுமான நிகும்பன் என்பவனும் உள்ளான்.
 

இங்குக்   கூறப்படும்   நிகும்பனும், அடுத்த பாடலில் வரும்
கும்பனும் கும்பகர்ணனுடைய   பிள்ளைகள் என்று    வான்மீகம்
கூறும். மீதிடும் - தாண்டிச் செல்லும். உருப்ப - கோபம் கொண்ட
கடாய் - செலுத்தி அக்கினி தேவனுக்கு    ஆட்டுக்கடாவாகனம்
என்பர். அந்த நெருப்புக் கடவுளையும் வென்றவன் நிகும்பன். 
 

(34)