பக்கம் எண் :

310யுத்த காண்டம் 

சலித்திடு -   பெற்ற   தாய் ஆனாலும்   கலக்கம் செய்யவல்ல;
வஞ்சனை தவிரா மாயையான்- வஞ்சம்   நீங்காத   மாயையை
உடையவன்; மகோதரன்  என்று   ஒரு   மறவோன்  உளன்
- மகோதரன் என்னும் பெயருடைய ஒரு வீரன் உள்ளான்.
 

வஞ்சிக்கத்தகாதவன்   அன்னை;   அத்தகைய   தாயையும்
வஞ்சிக்கத்   தக்க   மாயையில்    தேர்ந்தவன்    மகோதரன்;
'தாயையும்' என்பதன் உம்மை உயர்வு சிறப்பும்மை.   யாவர்க்கும்
தாயாகிய சீதாபிராட்டியிடம்,  மருத்தன்     என்னும் அரக்கனை
சனகன்    வேடம்தாங்கி   வரச் செய்து  பிராட்டியை வஞ்சிக்க
முற்பட்டதை  நினைந்து   'தாயையாயினும்  சலித்திடு   வஞ்சன்'
என்றார் போலும். அறத்துக்குப்   புறம்பானது   மறம் என்பதால்
'மறவோன்' என்ற சொல்லுக்குப் பாவி என்பதும் பொருந்தும். 
  

(36)
 

6552.

'குன்றில் வாழ்பவர் கோடி நால்-ஐந்தினுக்கு

இறைவன்,

"இன்று உளார் பினை நாளை இலார்" என 

எயிற்றால்

தின்றுளான், நெடும் பல் முறை தேவரைச் செருவின்
வென்றுளான், உளன், வேள்வியின்பகைஞன், ஓர்

வெய்யோன்.

 

குன்றில் வாழ்பவர்- மலைகளிலே   வாழும்   அரக்கர்கள்;
கோடி நாலைந்தினுக் கிறைவன் - இருபது கோடி   பேருக்குத்
தலைவனும்; இன்றுளார் பினை  நாளை   இலாரென - இன்று
இருப்பவர்கள் பின்பு நாளைக்கு இருக்க மாட்டார்கள் என்னும்படி;
எயிற்றால் தின்றுளான்
- பற்களால் கடித்துத்   தின்று  தீர்க்க
வல்லவனும்; தேவரைச் செருவின்-   தேவர்களைப் போரிலே;
நெடும் பல்முறை வென்றுளான்
-  பலமுறையும் வென்றவனும்
ஆகிய; வேள்வியின் பகைஞன் -  வேள்விப்  பகைவன் என்ற
பெயர் கொண்ட; ஓர் வெய்யோன்   உளன்- ஒரு கொடியவன்
இருக்கிறான்.
 

ஆங்காங்கு   மலைகளிலே   வாழ்கின்ற   இருபது   கோடி
அரக்கர்களுக்குத்   தலைவன்.   "இன்றிருப்பவர்கள்  நாளைக்கு
இல்லை" என்னும்படி    எல்லோரையும்    கொன்று   தீர்க்கும்
கொடியவன். தேவர்களைப் பலமுறை   வென்றவன்.   வேள்விப்
பகைஞன்'   என்னும்    கொடியவன்.   'எக்ஞவிரோதி'   என்ற
வடமொழிப் பெயரின் தமிழ் வடிவம் இது. 'இன்றுளார்    நாளை
மாள்வர்' என்பதை இராவணன்