கூற்றாகவும் (9125) கம்பர் கூறுவது கருதத்தக்கது 'நெடும் பல்முறை' என்பதற்கு 'பண்டு பல்முறை' என்பதொரு பாடம் உண்டு. அது பொருந்தும். எயிறு - பற்கள் நெடும் - நீண்ட வெய்யோன் - கொடியவன். |
(37) |
6553. | ' "மண் உளாரையும் வானில் உள்ளாரையும் |
| வகுத்தால், |
| உண்ணும் நாள் ஒரு நாளின்" என்று ஒளிர் |
| படைத் தானை |
| எண்ணின் நால்-இரு கோடியன், எரி அஞ்ச |
| விழிக்கும் |
| கண்ணினான், உளன், சூரியன்பகை என்று ஓர் |
| கழலான். |
| |
மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் - மண்ணுலகத்தில் உள்ளவர்களையும், விண்ணுலகத்தில் உள்ளவர்களையும்; வகுத்தால் உண்ணும் நாள் ஒரு நாளின் என்று - சேர்த்து வகைப்படுத்தி வைத்தால் அனைத்தையும் உண்ணும்நாள் ஒரு நாள் என்று கூறத்தக்க; ஒளிர்படைத்தானை - ஒளிவீசும் படைக்கலங்களை உடைய சேனை; எண்ணின் நாலிரு கோடியன்- எண்ணினால் எட்டிக் கோடி உடையவனாவான்; எரிஅஞ்ச விழிக்கும் கண்ணினான்- நெருப்பும் அஞ்சுமாறு விழிக்கும் கண்களை உடையவன்; சூரியன் பகை என்றோர் கழலான் உளன்- சூரியன் பகைஞன் என்ற பெயருடைய கழலணிந்த வீரன் ஒருவன் உள்ளான். |
பிறரை அஞ்சச் செய்யும் வெப்பத்தை உடையது நெருப்பு என்றால், அந்த நெருப்பும் அஞ்சும்படி விழிக்கும் கண்களை உடையவன் இந்தச் சூரியன் பகைஞன் (சூரிய விரோதி) |
(38) |
6554. | 'தேவரும், தக்க முனிவரும், திசைமுகன் முதலா |
| மூவரும், பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான், |
| தாவரும் பக்கம் எண்-இரு கோடியின் தலைவன், |
| மாபெரும்பக்கன் என்று உளன், குன்றினும் வலியான். |
| |
தேவரும் தக்க முனிவரும் - தேவர்களும், தகுதியுடைய முனிவர்களும்; திசைமுகன் முதலா மூவரும் - பிரமன் முதலான மும்மூர்த்திகளும்; பக்கம் நோக்கியே மொழிதர- (நேருக்கு நேராக |