நின்று பேசுவதற்கு அஞ்சிப்) பக்கம் பார்த்தே பேசுமாறு; முனிவான் - கோபம் உடையவனும்; தாவரும் பக்கம் எண் இரு கோடியின் தலைவன் - மிகுந்த வலிமை கொண்ட சேனையின் பதினாலு கோடி பேருக்குத் தலைவனும்; குன்றினும் வலியான் - மலையை விட வலியவனுமான; மாபெரும் பக்கன் என்றுளன்- மாபெரும் பக்கன் என்னும் பெயருடைய ஒருவன் உள்ளான். |
தாவரும் - வலிமை மிக்க பக்கம் - சேனை. பெரும் பக்கன் படைத் தலைவர்களுள் முதன்மை வாய்ந்தவன்; அவனது வலிமையையும், தோற்றத்தையும் குறிப்பிட 'மலையினும் வலியன்' என்றான். |
(39) |
6555. | 'உச் சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன், |
| நச் சிரப் படை நால்-இரு கோடிக்கு நாதன், |
| முச் சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரு |
| மொய்ம்பன். |
| வச்சிரத்துஎயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான். |
| |
உச்சிரத்து எரி கதிர் என - தலைக்கு மேலே எரிகின்ற சூரியன் என்னும்படி; உருத்து எரி முகத்தன் - சினந்து எரியும் முகத்தை உடையவனும்; நச்சிரப்படை நாலிரு கோடிக்கு நாதன் - சிறந்த தலைமை வாய்ந்த எட்டுக் கோடி பேரைக் கொண்ட படைக்குத் தலைவனும்; முச்சிரத்து அயில் தலைவற்கும்- முக்கவட்டுச் சூலத்தைஉடைய சிவபிரானுக்கும்; வெலற்கு அரு மொய்ம்பன்- போரில் வெல்லுதற்கரிய வலிமை உடையவனும்; கூற்றுவன் மாற்றான் - எமனையும் எதிர்த்து நிற்கவல்ல பகைவனுமான; வச்சிரத்தெயிற்றவன் உளன் - வச்சிரதந்தன் என்னும் பெயர் கொண்டவன் இருக்கிறான். |
உச்சிரம் - தலைக்கு மேல் உச்சியில் எரிக்கும் சூரியன் வெப்பம் மிகுதியும் உடையவன். அந்தப் பரிதியை ஒத்து எரியும் முகத்தை உடையவன் என்பதை 'உருத்து எரி முகத்தன்' என்றார். முச்சிரம் - மூன்று கவடுகள். தலைவன் - சிவபிரான். 'கூற்றுவன் மாற்றான்' கூற்றுவனுக்குப் பகைவன். வச்சிரம் போன்ற பற்களை உடையவன் என்பதால் 'வச்சிரத்து எயிற்றவன்" என்றார் 'வச்சிரதந்தன்' என்பது பெயராகும். |
(40) |
6556. | 'அசஞ்சலப் படை ஐ-இரு கோடியன், அமரின் |
| வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான், |