| இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரொடும் முன் |
| நாள் |
| பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு |
| பித்தன். |
| |
அசஞ்சலப்படை ஐயிரு கோடியன் - பகைவரைக் கண்டு நடுங்காத தன்மையினரான பத்துக் கோடி வீரர்களைக் கொண்ட படையை உடையவனும்; அமரின் வசம் செயாதவன்- போரில் வெல்லப்படாதவன்; தானன்றிப் பிறர் இலாவலியன்- தானேயல்லாது பிறர் எவருமில்லாத வலிமை உடையவனும்; இசைந்த வெஞ்சமத்து - தான் இசைந்து செய்த கொடிய போரில்; இயக்கரை வேரொடும் முன்நாள் பிசைந்து மோந்தவன்- இயக்கர்களை முன் ஒரு காலத்தில் வேருடன் அழியுமாறு கைகளால் பிசைந்து முகர்ந்து பார்த்தவனும்; ஒரு பித்தன்- போர் புரிவதே நோக்கமான பைத்தியம் பிடித்தவனுமான; பிசாசன் என்று உளன் - பிசாசன் என்பவன் உள்ளான். |
அசஞ்சலப்படை - பகைவரைக் கண்டு நடுங்காத சேனை. சஞ்சலம் என்ற சொல்லின் எதிர்ப்பதம் 'அசஞ்சலம்' என்பதாகும். பிறர் எவராலும் வெல்லப்படாதவன் என்பதால் 'வசம் செயாதவள்' என்றான். தான் பிறரை வெல்லவல்லவனே அல்லாது இவனை வெல்லவல்லார் பிறர் எவருமில்லை என்னும்படி வலிமை மிக்கவன் என்பதாம். |
(41) |
6557. | 'சில்லி மாப் பெருந் தேரொடும், கரி, பரி, சிறந்த |
| வில்லின் மாப் படை ஏழ்-இரு கோடிக்கு வேந்தன், |
| கல்லி மாப் படி கலக்குவான், கனல் எனக் காந்திச் |
| சொல்லும் மாற்றத்தன், துன்முகன் என்று அறம் |
| துறந்தோன். |
| |
சில்லிமாப் பெரும் தேரொடும் - சக்கரத்தை உடைய பெரியதேர்ப் படையுடனே; கரி, பரி, சிறந்த வில்லின் மாப்படை - யானை, குதிரை, சிறந்த வில் வீரர்களையுடைய காலாட் படை என்ற; ஏழ் இரு கோடிக்கு வேந்தன் - பதினான்கு கோடிப் பேர் கொண்ட பெரும்படைக்குத் தலைவனும்; கல்லி மாப்படி கலக்குவான் - இந்தப் பெரிய பூமியையேதோண்டி எடுத்துக் கலங்கச் செய்பவனும்; கனல் எனக் காந்திச் சொல்லும் மாற்றத்தன்- தீயைப் போல்கனல் காந்தும்படி பேசும் பேச்சை உடையவனும்; |