அறம் துறந்தோன் - அறச் செயல்களை நீக்கியவனுமான; துன்முகன் என்று- துன்முகன் என்ற பெயருடைய ஒருவன் உள்ளான். |
சில்லி - தேர்ச் சக்கரம். இந்தப் பெரிய பூமியையும் தோண்டி, கலங்கச் செய்யும் வல்லமை பெற்றவன் என்பதால் 'கல்லி மாப்படை கலக்குவன்' என்றான். கனல் தெறிக்கப் பேசுபவன் என்பதைக் 'கனல் எனக்காந்திச் சொல்லும் மாற்றத்தன்' என்று குறித்தான். |
(42) |
6558. | 'இலங்கை நாட்டன்ன எறி கடல் தீவிடை உறையும் |
| அலங்கல் வேற் படை ஐ-இரு கோடிக்கும் அரசன், |
| வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் |
| மறைத்தான், |
| விலங்குநாட்டத்தன் என்று உளன், வெயில் உக |
| விழிப்பான். |
| |
இலங்கை நாட்டன்ன - இலங்கை நாட்டைப் போன்று; எரிகடல் தீவிடை உறையும் - அலையெறியும் கடல் நடுவே அமைந்த தீவுகளிலே வாழ்கின்ற; அலங்கல் வேற்படை - மாலை சூடிய வேற்படை வீரர்கள்; ஐயிரு கோடிக்கும் அரசன் - பத்துக் கோடி பேருடைய படைக்குத் தலைவனும்; வலம் கொள்வாள் தொழில் - வலிமை மிக்க வாட்போரில் வல்ல; விஞ்சையர் பெரும்புகழ் மறைத்தான் - விஞ்சையரோடு போரிட்டு வென்று, அவர்களது புகழைமறையுமாறு செய்தவனும்; வெயில் உக விழிப்பான்- தீப்பொறி பறக்க விழிப்பவனும்; விலங்கு நாட்டத்தன் என்று உளன் - வீரூபாக்கன் என்ற பெயர் கொண்ட ஒருவன் உள்ளான். |
வாள் வேல் போன்றவைகளை மாலை சூட்டி அலங்கரிப்பதுண்டு. 'இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி' (புறம் 95) என்ற புறப்பாட்டாலும் இதை அறியலாம். விஞ்சையர் - தேவருள் ஒரு பிரிவினர் விலங்கு நாட்டத்தன் - விரூபாட்சன் என்பதன் தமிழ் ஆக்கமாகும். |
(43) |
6559. | 'நாமம் நாட்டிய சவம் எனின், நாள் என்றும் ஒருவர் |
| ஈம நாட்டிடை இடாமல், தன் எயிற்றிடை இடுவான், |
| தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன், |
| தூமநாட்டத்தன் என்று உளன், தேவரைத் துரந்தான். |