பக்கம் எண் :

49   யுத்த காண்டம்

"அனுமன் என்பவனை - ஆழி ஐய! - நின்செய்யசெங்கைத்
தனு என நினைதி,...................................................................

(4071)
 

என்று   கூறிவிட்டான்   ஆதலாலும்,  இலங்கைக்கு வந்த
அனுமன்  செய்த போர்த் திறனைக் கண்டான் ஆதலாலும்,
வீடணன்   இப்பொழுது   மாருதியின்     துணை உனக்கு
வேண்டும் என்று   இலக்குவனைப்  பார்த்துப் பேசுகிறான்.
அதற்கடுத்தபடியாக,   சாம்பவன்,   சுக்கிரீவன்,  அங்கதன்,
நீலன்     என்பவர்களையும்  இலக்குவன்    துணையாகக்
கொள்ளவேண்டும் என்று வீடணன்   கூறுகிறான். இவ்வாறு
கூறிமுடித்த    பிறகும்,    'இராமன் கையில்  கோதண்டம்
போன்றவனாகிய அனுமனையே கட்டிவிட்டான்    என்றால்,
இந்திரசித்தன் வலிமை எத்தகையது என்பதை நீ     அறிய
வேண்டும்'. (8033) என்றும் பேசி முடிக்கிறான்.
 

அடுத்து, இந்திரசித்தன் அனுமன் இருவரிடையே நடைபெறும்
போர்   சுவையானது. நூற்றுக்கணக்கான அம்புகளை மாருதியின்
உடலில் பாய்ச்சி,    குருதி    வெள்ளத்தில்     ஓடவிடுகிறான்,
இந்திரசித்தன். இதன் எதிராக மாருதி, ஒரு  மலையை    எடுத்து
இந்திரசித்தன்    மேல்   எறிய,   அது  பொடியாகிறது. மாருதி
முதலிய அனைவருடைய உடம்புகளும்      முள்ளம்பன்றிபோல்
துளைத்துள்ள பாணங்களோடுகாட்சி   அளிக்கின்றன. இலக்குவன்
இவர்களைப் பார்த்தவுடன், இந்திரசித்தன்   ஆற்றலை ஒருவாறு
அறியமுடிகிறது.     இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் நீண்ட
போர் நடைபெறுகிறது.   அப்போரின் கடுமையைக் கண்ட சுத்த
வீரனாகிய இந்திரசித்தன், இலக்குவன் ஆற்றலை மனம்  திறந்து
பாராட்டுகிறான்.
 

அந்நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்;அன்றேல்,
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
மன்னர் நம்பதியின் வந்து, வரிசிலை பிடித்த கல்வி
இந்நரன்தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்?' என்றான்.

(8121)
 

இவன்  மனிதனல்லன், நாராயணனே ஆவான், இல்லை சிவனே
ஆவான்,  இல்லை  பிரம்மனே ஆவான் என்று சொல்பவர்கள்
சொல்லிக்கொண்டு   இருக்கட்டும்.   இன்றுவரை   உலகிடைப்
பிறந்து, கையில் வில்லேந்திப் போர்புரிந்தவர்களுள்    இவனை
ஒத்தவர்கள் இதுவரை பிறக்கவில்லை என்பதே   இந்திரசித்தன்
பாராட்டு.