நாமம் நாட்டிய சவம் எனின்- பிறருக்கு அச்சத்தைத் தரும் வீரர்களின் பிணம் என்றால்; நாள் என்றும் ஒருவர் - அதனைச் சுடலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நாளாயிற்றென்று ஒருவர்; ஈம நாட்டிடை இடாமல் - சுடுகாட்டிலே சென்று புதைக்க விடாமல்; தன் எயிற்றிடை இடுவான் - தன் வாயிலே பெய்து தின்பவனும்; தாமம் நாட்டிய கொடிப் படை - மாலை சூடி, கொடிகளை உடைய சேனை; பதுமத்தின் தலைவன் - பதுமம் என்ற அளவையுடையவற்றின் தலைவனும்; தேவரைத் துரந்தான் - தேவர்களைப் போரில் வென்று விரட்டியவனுமாய; தூம நாட்டத்தன் என்றுளன் - புகைக் கண்ணன் என்ற பெயருடைய ஒருவன் உள்ளான். |
ஈமநாடு - சுடுகாடு. தூமாட்சன் என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கமே; 'தூம நாட்டத்தன்' என்பது; புகைக்கண்ணன் எனலாம். |
(44) |
6560. | 'போரின் மத்தனும், பொரு வயமத்தனும், புலவர் |
| நீரின் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் |
| படையார்; |
| ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அவரால் |
| பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய் ! |
| |
பெரியோய் - பெருமைமிக்கவனே; போரின் மத்தனும் பொருவய மத்தனும்- போர்த் தொழில்வல்ல மத்தனும், போரில் வல்லவய மத்தனும் ஆகிய இருவரும்; புலவர் நீரின் மத்து எனும் பெருமையர் - தேவர்கள் பாற்கடலில் இட்ட மத்தாகிய மந்தரமலை என்று சொல்லும் பெருமை உடையவர்கள்; நெடுங் கடற்படையார் - நீண்ட பெரிய கடல் போன்ற படையை உடையவர்கள்; ஆரும் அத்தனை வலியுடையாரிலை - இவர்களுக்கு ஒப்பான வலிமை உடையவர்கள் யாருமே இல்லை; அவரால் அத்தனை எத்தனை உலகமும் பேரும் - இவர்களால் எத்தனை உலகங்கள் உண்டோ அத்தனையும் நிலை பெயர்ந்து கெட்டழிந்து போகும். |
'போரின் மத்தன், பொருவயமத்தன்' என்னுமிருவரும் இரட்டையர் போலும். பகைக்கடலைக் கலக்கும் மத்துப் போன்றவராதலின் இப் பெயர் பெற்றனர் போலும். புலவர் - தேவர்கள். நீர் - கடல் இங்கு பாற்கடலைக் குறித்தது. தேவர்களாகிய பாற்கடலைக் |