பக்கம் எண் :

316யுத்த காண்டம் 

கடைந்து கலங்கச்   செய்யும்   மத்துப்   போன்றவர்   என்பது
கருதத்தக்கது  பேரும்  நிலை   பெயர்ந்து.   பெருமை   மலை
போன்றதாகிய   உடற்   பெருமை   என்பதால் 'பெருமையோர்' 
என்றான். 
 

(45)
 

சேனை காவலன் பிரகத்தன்
 

6561.

'இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் -
அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு 

அமைந்தார்?

சொன்ன சொன்னவர் படைத் துணை இரட்டியின் 

தொகையான்.

பின்னை எண்ணுவான், பிரகத்தன் என்று ஒரு 

பித்தன்;

 

அன்னவன் பெருந்துணைவராய் - அந்த   இராவணனுக்குப்
பெரிதும்  துணைநிற்பவராய்;   அமர்த்   தொழிற்கு அமைந்தார்
- போர்த்  தொழிலுக்கென அமைந்தவர்கள்; இன்ன தன்மையர் -
இத்தகைய   (முன்னர்க்   கூறிய)   ஆற்றல் மிக்கவர்;  எத்தனை
ஆயிரம் என்கேன்
-   எத்தனையாயிரம்   பேருள்ளனர்  எனக்
கூறுவேன்;   சொன்ன சொன்னவர் படை  -   முன்னே  நான்
சொன்னவர்களின்   விவரித்துக்   கூறிய   படையினும்;   துணை
இரட்டியின் தொகையான்  
- இரண்டு    மடங்கு எண்ணிக்கை
உடையவனும்; பின்னை  எண்ணுவான்   - (எண்ணித்துணியாது)
துணிந்த பின் எண்ணுபவனும் ஆன;   பிரகத்தன்   என்று ஒரு
பித்தன்
- பிரகத்தன் என்ற பெயருடைய   ஒருவன் போரிடுவதில்
பித்துடையவன் உள்ளான்.
 

இரட்டி - இரண்டு மடங்கு. எத்தனை ... என்கேன் - எவ்வளவு
என்று   சொல்வேன்?   பெரும்படை   உடையவன்    என்பதால்
தன்னம்பிக்கையால் முன்பு   சிந்திக்காது   பின்பு   நினைப்பவன்,
துணிந்தபின்  எண்ணுபவன்   என்றான்.   பிரகத்தன்   என்பவன்
இராவணனது படைத்தலைவன்; போர்  புரிவதில்   பித்துடையவன்
என்பதால் 'ஒரு பித்தன்' என்றான்.
 

(46)
 

6562.

'சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு

அகல,