| ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று |
| அலைய, |
| சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான். |
| |
சேனை காவலன் - இந்தப் பிரகத்தன் இராவணனுடைய சேனைக்குக் காவலன் ஆவான்; இந்திரன் சிந்துரச் சென்னியானை - தேவேந்திரனுடைய சிந்தூரம் அப்பிய மத்தகத்தை உடைய ஐராவதமானது; கால்குலைந்து ஆழியோர் ஏழும் விட்டகல - கால்கள் தடுமாறி ஏழுகடல்களையும் தாண்டிப் பயந்தோடவும்; ஏனைவானவர் - மற்றுமுள்ள தேவர்கள் அத்தனைபேரும்; இருக்கைவிட்டு இரியலுற்று அலைய- தங்கள் இருப்பிடங்களை விட்டு ஓடி அலைந்து திரியவும்; சோனை மாரியின் - விடாது பெய்யும் மழையைப் போல; சுடுகணை பலமுறை துரந்தான் - சுடுகின்ற அம்புகளைப் பலமுறையும் செலுத்தியவனாவான். |
சிந்துரச் சென்னியானை - சிந்தூரம் பூசிய மத்தகத்தை உடைய யானையாகிய ஐராவதம். என்ற வெள்ளையானை: யானைகளின் மத்தகத்தில் சிந்தூரம் அணிவிப்பது வழக்கம். இதனை 'சிந்தூரத் திலக நுதல் சிந்துரத்தின் மருப் பொசித்த செங்கண் மாலே' என்ற வில்லிபாரதத்தாலும் (கிருஷ்ணன் தூதுச் சருக்கம்) அறியலாம். குலைந்து தடுமாறி ஐராவதம் அஞ்சி ஓடியது என்பதால் இந்திரன் அஞ்சியகன்றது பெறப்படும். ஏனைவானவர். இந்திரனைத் தவிர, மற்றுமுள்ள தேவர்கள். சோனை மாரி - விடாது பெய்யும் மழை. |
(47) |
கும்பகருணன் வலிமை |
6563. | 'தம்பி, முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும் |
| கும்ப மாக் கிரிக் கோடு இரு கைகளால் கழற்றி |
| செம் பொன் மால் வரை மதம் பட்டதாம் எனத் |
| திரிந்தான். |
| கும்பகன்னன் என்று உளன், பண்டு தேவரைக் |
| குமைத்தான். |
| |
தம்பி - அந்த இராவணனுடைய தம்பி; முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்- முதல் நாளைய பிறைச் சந்திரர் நால்வர் சேர்ந்தது போல விளங்கும்; கும்ப மாகிரிக் கோடு - மத்தகத்தையுடைய பெரிய மலை போன்ற யானையான ஐராவதத்தின் தந்தங்களை; இரு கைகளால் கழற்றி - தனது இரண்டு கைகளாலும் வாங்கி; செம்பொன் மால்வரை - |