செம்பொன் மலையான பெரியமேருமலை; மதம் பட்டதாமெனத் திரிந்தான் - மதம் கொண்டு அலைந்தது எனும்படி எங்கும் திரிந்தவன்; பண்டு தேவரைக் குமைத்தான் - முன்பு தேவர்களையெல்லாம் அடியோடு அழித்த; கும்பகன்னன் என்று உளன் - கும்பகன்னன் என்ற பெயருடைய வீரன் உள்ளான். |
முற்பகல் அமாவாசைக்குப் பின் முதல் நாள், 'சந்திரர் நால்வர்' என்றது பிறைச் சந்திரர் நான்கு பேர் சேர்ந்தது போல விளங்கும் நான்கு தந்தங்களை. கும்பம் - மத்தகம். இந்திரனுடைய ஐராவதம். அந்த யானையின் தந்தங்களை எவ்வித முயற்சியுமின்றி சுலபமாகக் கைப்பற்றினான் என்பதைக் கழற்றி என்றான். 'மேருமலை மதம் கொண்டு திரிந்தது போலத் திரிந்தான்' என்பது இல் பொருள் உவமை குமைத்தல் - அழித்தல். |
(48) |
இராவணனது புதல்வர்களின் ஆற்றல் |
6564. | 'கோள் இரண்டையும் கொடுஞ் சிறை வைத்த அக் |
| குமரன் |
| மூளும் வெஞ் சினத்து இந்திரசித்து என |
| மொழிவான்; |
| ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் |
| பின்னை. |
| தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு. |
| |
கோள் இரண்டையும் - (கோள்கள் ஒன்பதிலும் முதன்மை வாய்ந்த) சூரியன், சந்திரன் என்னும் இரண்டினையும்; கொடுஞ் சிறைவைத்த அக்குமரன்- கொடிய சிறையிலே வைத்த இராவணனது மகனான; மூளும் வெஞ்சினத்து - மூண்டெழும் கொடிய வெகுளியை உடைய; 'இந்திரசித்து' என மொழிவான் - இந்திரசித்து எனக் கூறப்படுபவன்; ஆளும் இந்திரற்கு - விண்ணுலகத்தை ஆளும் தேவேந்திரனுக்கு; அன்னவன் பிணித்ததன் பின்னை - இந்திரசித்து அவனை வென்று கட்டிவைத்த பின்பு; இனம் தழும்பு தாளினும் உள தோளினும் உள - இந்திரனுடைய கால்களிலும் தோள்களிலும் இன்னும் தழும்புகள் உள்ளன. |
இந்திரனுடன் போரிட்டு வென்றமையால் 'இந்திரசித்து' எனப் பெயர் கொண்டான் இராவணன் மகனான மேகநாதன். இரு கோள்களையும் சிறை வைத்த இராவணன் மகன் என்பதால் "சிறை |