வைத்தவன் குமரன்" என்ற பாடம் சிறந்தது என்பர் வை.மு.கோ. 'இரு கோளும் சிறைவைத்தாற்கு இளையேன்' என்ற சூர்ப்பனகையின் கூற்று இதற்குச் சான்றாகும். இந்திரனைப் பிணித்தமையால் அவனுடைய தாளிலும், தோளிலும் தழும்பு இன்னும் மாறாமல் இருக்கிறது என இந்திரசித்தன் ஆற்றலைக் கூறுவான் 'சதமகனைத் தளையிட்டு' எனவும் 'இருகாலில் புரந்தரனை இருஞ்சிறையின் இடுவித்து' எனவும் சூர்ப்பனகையின் கூற்றில் வைத்து முன்பும் இந்திரனைப் பிணித்த செய்தியைக் கூறியுள்ளார் (கம்ப.2842, 2843) |
(49) |
6565. | 'தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் |
| தாழான், |
| முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் |
| சிலையான் |
| அன்னவன்தனக்கு இளையவன், அப் பெயர் |
| ஒழித்தான் |
| பின் ஓர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன். |
| |
தன்னையும் தெறும் தருமம் என்று - அறத்துக்கு மாறாக நடப்பவர்களை அழிக்கும் அறக்கடவுள் தன்னையும் அழிக்கும் என்று; இறை மனம் தாழான் - சிறிதும் மனத்திலே கருதாமல் விரைந்து பாவச் செயல் புரிபவன்; முன்னவன் தரப் பெற்றதோர் - முன்னவனாகிய பிரமதேவன் தரப் பெற்றதாகிய ஒரு; முழுவலிச் சிலையான் - முழுமையான வலிமையை உடையவில்லை உடையவன்; அன்னவன் தனக்கு இளையவன் - அந்த இந்திரசித்துக்குத் தம்பி; பின் ஓர் இந்திரன் இலாமையின் - இந்திரசித்து வென்ற இந்திரனைத் தவிர வேறு ஒரு இந்திரன் இல்லாமையால். அப்பெயர் ஒழித்தான் - அந்தப் பெயரை நீக்கினவனாய்; பேர் அதிகாயன் - அதிகாயன் என்னும் பெயர் கொண்டவனாய் உள்ளான். |
'முன்னவன்' - படைப்புத் தொழிலுக்குரியவன் என்பதாலும் இராவணன் குடிக்கு முதல் தலைவன். என்பதாலும் பிரமனை 'முன்னவன்' என்றான் "பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி" (கம்ப. 2770) என்ற சூர்ப்பணகை உரையாலும் பிரமாவின் வழிவந்தவன் இராவணன் என்பது புலனாகும். |
(50) |
6566. | 'தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா என்னும் |
| மூவர் ஆம்,-"தகை முதல்வர் ஆம் தலைவரும் |
| முனையின், |