| போவராம்; தகை அழிவராம்" எனத் தனிப் | | பொருவார் | | ஆவராம்-தகை இராவணற்கு அரும் பெறல் | | புதல்வர். | | | தேவராந்தகன், நராந்தகன் திரிசிரா என்னும் மூவராம் - தேவராந்தகன், நராந்தகன் திரிசிரா என்ற மூவருடனும்; தகை முதல்வராம் தலைவரும் முனையின் போவராம் - தகைசிறந்த முதல் தலைவர்களான பிரமன், திருமால், சிவன் ஆகிய மூவரும் போரிட்டால் தோற்றுப்போவார்; தகை அழிவராம் - தமக்குரிய பெருமையை இழந்துவிடுவர்; எனத் தனிப் பொருவா ராவராம்- என்று உலகம் கூறுமாறு போரிட்டு வெல்லவல்ல; தகை இராவணற்கு - தகை சிறந்த இராவணனுக்கு; அரும் பெரும் புதல்வர் - (இந்திரசித்து, அதிகாயன் என்பவரைத்தவிர) அரிய, பெருமைமிக்க புத்திரர்களாவர். | தேவர் அந்தகன் - தேவர்களுக்கு எமன், நர அந்தகன் - நரர்களுக்கு எமன். நரர் - மனிதர். திரிசிரா - மூன்று தலைகளை உடையவன். மும்மூர்த்திகளும் இவருடன் போரிட்டால் தோல்வியுற்றுத் தமது பெருமையை இழந்துவிடுவர் மூவராம், முதல்வராம், அழிவராம், ஆவராம் என, வந்த சொல்லே திரும்பி வந்து செய்யுளுக்கு இனிய ஓசை தந்தது கூறி மகிழ்தற்குரியது. இது சொற்பொருட்பின் வருநிலை அணியாகும். மும்மூர்த்திகளையும் வெல்ல வல்லவர் இம்மூவர் என்பது கருத்து. | (51) | இராவணன் திறம் | 6567. | 'இனைய தன்மையர் வலி இஃது; இராவணன் | | என்னும் | | அனையவன் திறம் யான் அறி அளவு எலாம் | | அறைவென்: | | தனையன், நான்முகன் தகை மகன் சிறுவகு; | | தவத்தால், | | முனைவர் கோன் வரம், முக்கணான் வரத்தொடும் | | உயர்ந்தான். | | | இனைய தன்மையர் வலி இஃது - இராவணனது துணைவர், தம்பி, மக்கள் ஆகிய இத்தன்மையோர் வலிமை இது; இராவணன் |
|
|
|