என்னும் அனையவன் திறம்- இராவணன் என்ற பெயர் உடைய அவனது திறத்தை; யானறி அளவெலாம் அறைவென் - யான் அறிந்திருக்கும் அளவுக்கு எல்லாம் எடுத்துக் கூறுவேன்; நான்முகன் தகைமகன் சிறுவற்குத் தனையன்- பிரம தேவனது தகுதிமிக்க மகனான புலத்தியனுக்கு மகனான விச்சிரவசுவின் மகனாகும்; தவத்தால் - இராவணன் செய்த தவத்தினாலே; முனைவர் கோன் வரம் - அந்தணர் தலைவனான பிரமன் தந்தவரம்; முக்கணான் வரத் தொடும் உயர்ந்தான் - மூன்று கண்களை உடைய சிவபெருமான் தந்த வரம் இவைகளால் உயர்ந்தவனானான். |
பிரமனுக்கு மகன் புலத்தியன்; அவன் மகன் விச்சிரவசு; அவன் மகன் இராவணன். முனைவர் கோன் - அந்தணர் தலைவன் (நான்முகன்) பிரமன் தந்தவரம் முக்கோடி வாழ்நாள். முக்கணான் தந்த வரம் "யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்தவாள்" (சந்திரகாசம்) |
(52) |
6568. | 'எள் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய |
| புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் |
| பொருந்தும் |
| வெள்ளி அம் பெருங் கிரியினை வேரொடும் வாங்கி, |
| அள்ளி விண் தொட எடுத்தனன், உலகு எலாம் |
| அனுங்க. |
| |
எள்இல் ஐம்பெரும் பூதமும் - எவரும் சிறிதென இகழாத மண், நீர், கால், தீ என்ற ஐந்து பெரிய பூதங்களும்; யாவையும் உடைய - இவற்றின் வேறுபாட்டால் உண்டான பிற எல்லாப் பொருள்களையும் உடையவனாகிய; புள்ளிமான் உரி ஆடையன் - புள்ளிகளை உடைய புலியின் தோலை ஆடையாக அணிந்துள்ள சிவபிரான்; உமையொடும் பொருந்தும் - உமாதேவியுடன் தங்கியிருக்கும்; வெள்ளி அம் பெருங் கிரியினை - வெள்ளியங்கிரியாகிய பெரிய மலையினை; வேரொடும் வாங்கி அள்ளி - வேரோடு பேர்த்து அள்ளி; உலகெலாம் அனுங்க- எல்லா உலகங்களும் வருந்தும்படி; விண் தொட எடுத்தனன்- விண்ணைத் தொடும்படி எடுத்தவன். |
எள்ளில் - இகழ்தல் இல்லாத (சிறிதென்று எவரும் இகழ்ந்து கூறமுடியாத என்பது பொருள்). புள்ளி மான் இங்கே வேங்கைப் |