புலியைக் குறித்தது. தாருக வனத்து முனிவர்கள் வேள்வித் தீயில் உருவாக்கி ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாகக் கொண்டவர் சிவபிரான். அனுங்குதல் - வருந்துதல். |
(53) |
6569. | ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை |
| ஊன்று கோடு இற, திரள் புயத்து அழுத்திய |
| ஒண்மை |
| தோன்றும் என்னவே, துணுக்கமுற்று இரிவர், |
| அத் தொகுதி |
| மூன்று கோடியின்மேல் ஒரு முப்பத்து மூவர். |
| |
ஆன்ற எண் திசை - விசாலமான எட்டுத் திசைகளிலும் நின்று; உலகெலாம் சுமக்கின்ற யானை - உலகத்தை எல்லாம் சுமக்கின்ற திக்கு யானைகளின்; ஊன்று கோடு இற - தனது மார்பில் ஊன்றிய தந்தங்கள் முறியும்படி; திரள்புயத்து அழுத்திய ஒண்மை - அதனைத்தன் திரண்ட தோள்களிலே அழுந்தச் செய்த மிக்க வலிமை; தோன்றும் என்னவே - காணப்படும் என்ற மாத்திரத்தில்; அத்தொகுதி மூன்று கோடியின் மேல் - தொகுதியான மூன்று கோடிக்கு மேல்; ஒரு முப்பத்து மூவர்- மூப்பத்து மூன்று பேராக இருக்கும் தேவர்கள்; துணுக்கம் உற்று இரிவர்- நடுங்கிக் கொண்டு விலகி ஓடுவார்கள். |
ஆன்ற - விசாலமான (நிறைந்த என்பதும் ஒரு பொருள்). ஒண்மை நிறைவு, ஒளி, மிகுதி என்ற பொருள் கொண்ட சொல் இங்கே வலிமை குறித்தது. திக்கு யானைகளுடன் போரிட்டு அவற்றின் முறிந்த தந்தங்களைத் தனது மார்புக்குக் கவசமாக அணிந்து கொண்டவன் இராவணன் என்பது உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி. |
(54) |
6570. | 'குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய, |
| அலங்கல் வாள்கொடு காலகேயரைக் கொன்ற |
| அதன்பின். |
| "இலங்கை வேந்தன்" என்று உரைத்தலும், இடி |
| உண்ட அரவின் |
| கலங்குமால் இனம், தானவர் தேவியர் கருப்பம். |
| |
கால கேயரை - இராவணன் கால கேயர்கள் என்னும் தானவர்களை; குலங்களோடும் - அவர்களின் குலமக்களோடு; தம் குலமணிமுடியொடும் குறைய - மணிகள் பதிக்கப் பெற்ற |