பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 323

மகுடங்களோடு, தலை குறையும்படி; அலங்கல் வாள் கொடு -
வெற்றிமாலை சூட்டியவாளைக் கொண்டு; கொன்ற அதன் பின்
-   கொன்ற  அதற்குப்   பிறகும்;   இலங்கை   வேந்தன்-
இலங்காதிபன்;   என்று   உரைத்தலும் - என்று கூறக் கேட்ட
அளவிலே;  தானவர்   தேவியர்   கருப்பம் - தானவர்களது
மனைவி மார்களின் கருப்பம்; இடியுண்ட அரவின்- இடியோசை
கேட்டு   அஞ்சும் பரம்பைப் போல;   இனம்  கலங்குமால் -
இன்னும் கலங்கும்.
 

இராவணன்   கால   கேயரை வென்ற செய்தி கூறப்படுகிறது.
குல மணி   முடி - நல்ல   சாதி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட
மகுடம்.   குறைய - அழிய.   'கொன்ற  அதன் பின்' என்பதற்கு
கொன்று பல   நாட்களாகிய அதன் பின் என்பது பொருள். கால
கேயர் தானவர் ஆதலின் தானவர் தேவியர் இடி யோசை கேட்ட
நாகம்   போல அஞ்சி நடுங்க   அந்த அச்சத்தால்   அவர்கள்
கருப்பம் கலங்கியது இனம் - இன்னும். 
 

(55)
 

6571.

'குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை

குபேரன்,

திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், 

இழந்து,-

புரண்டு, மான் திரள் புலி கண்டது ஆம் என,

போனான்-

இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து.
 

குரண்டம் ஆடு நீர் அளகையின்- கொக்குகள் விளையாடித்
திரியும்   நீர் நிலைகளை உடைய   அளகாபுரியில்; ஒளித்து உறை
குபேரன்
- இராவணனுக்கு அஞ்சி  ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த
குபேரன்; திரண்டமாடும் தன்   திருவொடு நிதியமும் இழந்து-
தனக்குரிய   திரண்ட   செல்வத்தையும்   வெற்றித் திருமகளையும்,
சங்க நிதி, பதுமநிதி என்பவைகளையும்   இராவணனிடம்   இழந்து
போய்; இரண்டு மானமும் இலங்கை மாநகரமும் இழந்து - தன்
மானம்,   விமானம்     என்று   இரண்டு   மானமும்,   இலங்கை
மாநகரத்தையும் இழந்து;   மான்திரள்   புலிகண்டதாம்  என -
புலியைக் கண்ட மான் கூட்டம் அஞ்சி  ஓடுவது போல;   புரண்டு
போனான்
- இராவணனிடம் தோற்று புரண்டு ஓடிப் போயினான்.
 

குரண்டம் - கொக்கு.   அளகாபுரி     குபேரனுடைய   நகரம்
நீர்நிலைகளில் கொக்குகள் விளையாடி மகிழும் என்பதை 'குரண்டம்