பக்கம் எண் :

324யுத்த காண்டம் 

ஆடு நீர் அளகை"   என்றான்.   மாடு.   செல்வம்.  நிதி. சங்க
நிதி, பதும நிதி  என்னுமிரண்டும்   குபேரனுக்குரிய   அளவற்ற
செல்வமாம்.  தன்   மானத்தையும்   விமானத்தையும்   இழந்து 
போனான்   என்பதை   'இரண்டு   மானமும் இழந்து' என்றான்.
இராவணன் குபேரனை வென்ற செய்தி இங்குக் கூறப்பட்டது.
 

(56)
 

6572.

' "புண்ணும் செய்தது முதுகு" என, புறங்கொடுத்து 

ஓடி,

"உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் 

உயிர்மேல்

நண்ணும் செய்கையது" எனக் கொடு, நாள்தொறும்,

 தன் நாள்

எண்ணும் செய்கையன், அந்தகன், தன் பதம் 

இழந்தான்.

 

உண்ணும் செய்கை அத்  தசமுகக்   கூற்றம்-   உயிரை
உண்ணும்   படியான செயலை  உடைய பத்து முகங்களை உடைய
இராவணன் என்னும்   கூற்றமானது; தன் உயிர் மேல் நண்ணும்
செய்கையதெனக் கொடு
-   தன்னுயிரையும்   கவர    வருதல்
செய்யும் என்றுஎண்ணி; புண்ணும் செய்தது முதுகு என - எனது
முதுகையும் புண் செய்து விட்டது என்று;  புறம்  கொடுத்து ஓடி
- புறமுதுகு காட்டி ஓடித் தப்பித்து; நாள்   தொறும்   தன்நாள்
எண்ணும் செய்கையன்
- தனது இறுதி  நாளைப்   பற்றி   நாள்
தோறும் நினைக்கும் செய்கையனாய்; அந்தகன்   தன்   பதம்
இழந்தான்
- எமன் தனது  தென்திசைக்   காவல்   பதவியையும்
இழந்தான். 
 

எமனுக்கும்   இறுதியைச்   செய்யும்   எமனாக  இராவணன்
விளங்கினான்   என்பதால்    "தசமுகக்     கூற்றம்"   என்றான்.
இராவணனால்   அடியுண்டு புறம்   காட்டி ஓடிய எமன் 'தசமுகக் 
கூற்றம்   இனி   வரும் நாள் நமது இறுதி நாள்' என்று நாட்களை
எண்ணிக் கொண்டிருந்தான்   என்பது   செய்தி   இராவணனால்
உயிர்களைக் கொல்லும் தனது தொழிலை   இழந்தான் என்பதால்
'அந்தகன்   தன் பதம்   இழந்தான்." என்றான்.   தென்திசையில்
இராவணன் வாழ்தலால், அங்குச்  செல்ல   அஞ்சிய   அந்தகன்
தென் திசைக் காவலை இழந்தான் எனவுமாம். 
 

(57)
 

6573.

'இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க; 

என்றும்

அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, பண்டு 

அமரில்,