| பருணன்தன் பெரும் பாசமும் பறிப்புண்டு, பயத்தால் |
| வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து |
| மறைந்து. |
| |
இருள் நன்கு ஆசற- இருள் நன்றாக விலகும்படி; எழு கதிரவன் நிற்க - கீழ்த்திசையில் எழும் சூரியன் இருக்கட்டும்; என்றும் அருணன் கண்களும் - சூரியனுடைய தேரில் சாரதியாக முன்னால் அமர்ந்திருக்கும் அருணனது கண்களும் கூட; கண்டிலா இலங்கை- பார்த்திராதது இலங்கை நகர்; பண்டு அமரில் - முன்பு இராவணனுடன் செய்த போரிலே; பருணன்தன் பெரும் பாசமும் பறிப்புண்டு - திறமை உடையவன் என்றாலும் தனது படையாகிய பாசம் பறிக்கப்பட; பயத்தால் - இராவணனைப்பற்றிய அச்சத்தினாலே; மகர நீர் வெள்ளத்து - மகாமீன்களை உடைய கடல் நீரிலே; மறைந்து வருணன் உய்ந்தனன் - மறைந்து வருணன் தப்பிப் பிழைத்தான். |
இராவணன் வருணனை வென்றது கூறப்பட்டுள்ளது. இராவணனுடன் நிகழ்ந்த போரில் தோற்றுத் தனது படையான பாசத்தைப் பறி கொடுத்து விட்டுக் கடலில் சென்று மறைந்தான். வருணன் என்பது கருத்து. பருணன் - திறமுள்ளவன். ஆசற - சிறிதும் இல்லாதபடி. |
(58) |
6574. | 'என்று உலப்புறச் சொல்லுகேன், இராவணன் |
| என்னும் |
| குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் |
| கொற்றம்? |
| இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சில நாள் |
| சென்று உலப்பினும் நினக்கு அன்றி, பிறர்க்கு |
| என்றும் தீரான். |
| |
இராவணன் என்னும் - இராவணன் என்ற பெயரை உடைய; குன்று உலப்பினும் - மலை அழிந்தாலும்; உலப்பிலாத் தோளினான் கொற்றம் - அதனுடன் மாறு கொண்டும் அழியாது தோள்களை உடையவனது வெற்றியை; என்று உலப்புறச் சொல்லுகேன்- என்று நான்முடிவாகச் சொல்லுவேன்; இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் - இராவணன் இன்று இறப்பான் ஆயினும், நாளையே இறப்பானாயினும்; சிலநாள் சென்று உலப்பினும் - அல்லது இன்னும் சில நாட்கள் கழிந்த பின் இறந்தானாயினும்; நினக்கு |