அன்றிப் பிறர்க்கு என்னும் தீரான்- உனக்கு அல்லாமல் வேறு எவருக்கும் அழிந்து தீரான். |
இராவணன் மலையுடன் மோதியதால் மலை அழிந்ததேயன்றித் தோள்கள் அழியவில்லை என்பான் 'உலப்பிலாத் தோளினான்' என்றான். பிறர் எவராலும் அழிவில்லாத இராவணன் உன்னால் மட்டுமே கொல்லப்படுபவனாவான் என்பதை 'நினக்கு அன்றிப் பிறர்க்கு என்றும் தீரான்' என்றான். தீரான் - அழியான். |
(59) |
இலங்கையில் அனுமன் புரிந்த வீரச்செயல்கள் |
கலித்துறை (வேறுவகை) |
6575. | 'ஈடு பட்டவர் எண்ணிலர் தோரணத்து, எழுவால்; |
| பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால்; |
| சூடு பட்டது, தொல் நகர்; அடு புலி துரந்த |
| ஆடு பட்டது பட்டனர்; அனுமனால் அரக்கர். |
| |
தோரணத்து - அசோக வனத்தின் வெளியே அமைந்த கட்டுவாயிலில்; எழுவால் ஈடுபட்டவர் எண்ணிலர்- அனுமானது இரும்புத் தடியால் வலிமை இழந்தவர் பல பேர்; பாடுபட்டவர் - அடிபட்டு அழிந்து போன அரக்கர்கள்; படுகடல் மணலினும் பலரால்- கடற்கரை மணலைவிட எண்ணற்றவராவார்; தொல்நகர் சூடுபட்டது - பழமையான இலங்கை மாநகரம் அனுமன் வைத்த தீயால் சூடுபட்டழிந்தது; அனுமனால் அரக்கர் - அனுமனுடைய வலிமையால் இலங்கை அரக்கர்கள்; அடுபுலிதுரந்த ஆடுபட்டது பட்டனர்- கொல்லவல்ல புலி துரத்த ஆட்டுக் கூட்டம் என்ன பாடுபடுமோ அந்தப் பாடுபட்டனர். |
தோரண கம்பத்திலே ஈடுபட்டவர் வலிமை இழந்தவர். பாடுபட்டவர் - துன்புற்றவர்கள். அனுமனால் விரட்டப்பட்ட அரக்கர்களுக்கு, புலியால் விரட்டப்பட்ட ஆடுகள் உவமையாகும். |
(60) |
6576. | எம் குலத்தவர், எண்பதினாயிரர், இறைவர், |
| கிங்கரப் பெயர் கிரி அன்ன தோற்றத்தர், கிளர்ந்தார்; |
| வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி. |
| சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார். |
| |
எம் குலத்தவர் எண் பதினாயிரர்- எமது அரக்கர் குலத்தில் பிறந்தவர்கள் எண்பதினாயிரம் பேர்களும்; இறைவர் - |