அவர்களுக்குத்தலைவர்களான; கிங்கரப் பெயர் கிரியன்ன தோற்றத்தர்- கிங்கார் என்னும் பெயருடைய மலை போன்ற தோற்றத்தவரும் ஆகி; கிளர்ந்தார்- அனுமனுடன் போரிடப் பொங்கி எழுந்தவர்களை; வெங்கரத்தினும்- அனுமான் தனது வலிய கைகளினாலும்; காலினும், வாலினும் - கால்களாலும் வாலினாலும்; வீக்கி - இறுகப் பிணித்தமையால்; சங்கரற்கு அழி - சிவ பெருமானாலே அழிந்துபோன; முப்புரத்தவர் எனச் சமைந்தார் - திரிபுரத்து அரக்கர்களைப் போல முடிந்தனர். |
கிங்கார்களை அனுமன் கைகளாலும் கால்களாலும் வாலாலும் பிணித்து அழித்தான் என்க. சிவபிரானால் அழிந்த திரிபுரத்தவர் அனுமனால் அழிந்த கிங்கரருக்கு உவமையாம். சமைதல் - அழிதல். |
(61) |
6577. | 'வெம்பு மாக் கடற் சேனை கொண்டு எதிர் பொர |
| வெகுண்டான், |
| அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி. |
| உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று |
| உற்றான். |
| சம்புமாலியும், வில்லினால் சுருக்குண்டு-தலைவ! |
| |
தலைவ- தலைவனே!; சம்பு மாலியும்- சம்புமாலி என்ற அரக்கர் தலைவனும்; வெம்பும் மாக்கடல் சேனைகொண்டு - சினம் மிக்க பெரியகடல் போன்ற படையைக் கொண்டு; எதிர் பொர வெகுண்டான் - அவனை எதிர்த்துப் போர் செய்யச் சினம் கொண்டு வந்தான்; அம்பும் ஆயிரத்து ஆயிரம் - ஆயிரம் ஆயிரம் அம்புகளை விட்டு; இவன் புயத்து அழுத்தி - இந்த அனுமன் புயத்திலே அழுந்தச் செய்து; வில்லினால் சுருக்குண்டு - அவன் கை வில்லினாலேயே அனுமனால் சுருக்கிடப்பட்டு; உம்பர் வானத்து- தேவர்கள் வாழும் விண்ணுலகுக்கு; ஒருதனி நமனைச் சென்று உற்றான்- தனி ஒருவனாக எமனைச் சென்று அடைந்தான். |
வெம்பு - வெகுளும். |
(62) |
6578. | 'சேனைக் காவலர் ஓர் ஐவர் உளர், பண்டு தேவர் |
| வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர். |