| தானைக் கார்க் கருங் கடலொடும், தமரொடும், |
| தாமும், |
| யானைக் கால் பட்ட செல் என, ஒல்லையின் |
| அவிந்தார். |
| |
சேனைக்காவலர் ஓர் ஐவர் உளர் - இராவணனது சேனையின் காவலர் ஐந்து பேர் உள்ளனர் (பஞ்சசேனாதிபதிகள்); பண்டு தேவர் வானை - முன்பு தேவர்களின் வானுலகத்தை; காவலும் மானமும் மாற்றிய மறவர் - பாதுகாப்பையும், மானத்தையும் மாற்றியவீரர்கள்; தானைக் கார்க் கரும் கடலொடும் - படையாகிய கரிய பெரிய கடலுடனே; தமரொடும் தாமும் - தமது உறவினருடனே தாங்களும் (அனுமனுடன் போரிட வந்தவர்கள்); யானைக் கால்பட்ட செல்என - யானையினது கால்களில் மிதிபட்ட கறையானைப் போல; ஒல்லையின் அவிந்தார் - விரைந்து அழிந்து போயினர். |
(63) |
6579. | 'காய்த்த அக் கணத்து, அரக்கர்தம் உடல் உகு |
| கறைத் தோல், |
| நீத்த எக்கரின், நிறைந்துள கருங் கடல்; நெருப்பின் |
| வாய்த்த அக்கனை, வரி சிலை மலையொடும் |
| வாங்கி, |
| தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் |
| தெருவில். |
| |
காய்த்த அக்கணத்து- (அனுமனை) சினமடையச் செய்த அந்தக் கணத்திலே; அரக்கர்தம் உடல் உகு- அந்த அரக்க வீரர்களின் உடலில் இருந்து சிந்தும்; கறைத்தோல் - இரத்தமும் அவர்களின் உடல் தோல்களும்; நீத்த எக்கரின் - கடற்கரையிலுள்ள மணல் திட்டுக்களைப் போல; நிறைந்துள கருங்கடல் - எங்கும் கரிய கடலாக நிறைந்துள்ளனவாயின்; நெருப்பின் வாய்த்த அக்கனை - நெருப்பென வெகுண்டு வந்த இராவணன் மகனான அட்சய குமாரனை; வரி சிலை மலையொடும் வாங்கி- கட்டமைந்த வில்லாகிய மலையோடு இழுத்து வாங்கி; தேய்த்த அக்குழம்பு - காலால் தேய்த்த அக்குழம்பு; இலங்கையின் தெருவில் உலர்ந்தில - இலங்கை வீதியிலே இன்னும் உலரவில்லை. |