பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 329

"விண்ணொடு மண்காணத்  தேய்த்தான்"  என,  இச்செய்தி
சுந்தரகாண்டத்துள்   (5705)   கூறப்பட்டுள்ளது.    'எம்பியோ
தேய்ந்தான் எந்தை  புகழ் அன்றோ  தேய்ந்தது'  (5721)  என
இந்திரசித்து  வாய்மொழியாகவும்  வரும்.  அட்சய  குமாரனை
உருத்  தெரியாமல் தேய்ந்த  அக்குழம்பு இலங்கை  வீதியிலே
இன்னும்  உலராமல்   இருக்கிறது   என்பான்  'இலங்கையின்
தெருவில் உலர்ந்தில' என்றான். 
 

(64)
 

6580.

'சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் 

துகைத்துச்

சின்னம் ஆனவர் கணக்கு இலர்; யாவரே 

தெரிப்பார்?

இன்னம் ஆர் உளர், வீரர்? மற்று, இவன் சுட 

எரிந்த

அன்ன மா நகர் அவிந்தது, அக் குருதியால் அன்று.
 

சொன்னமாமதில் - ஏற்கனவே கூறியபடி அமைந்த பெரிய
மதில்களால்;  இலங்கையின்  பரப்பினில் - இலங்கை நகரின்
பரப்பினுள்; துகைத்துச்  சின்னமானவர்- அனுமன்  காலால்
துகைக்கப்பட்டுச்  சின்ன  பின்னமான  அரக்கர்; கணக்கிலர்
யாவரே  தெரிப்பார்
   -    கணக்கற்றவர்    என்பதையார்
தெரிந்துரைக்கவல்லார்;  இன்னம்  யாருளர்வீரர்  - இன்னும்
இலங்கையிலே   வீரர்கள்  யாருள்ளனர்?; மற்று  இவன்  சுட
எரிந்த
- இந்த  அனுமன்  வைத்த  தீயினால் எரிந்த; அன்ன
மாநகர்
- அந்தப்   பெரிய இலங்கை  நகரம்; அக்குருதியால்
அவிந்தது
   -  அனுமனால்   சின்னமானவர்கள்    சிந்திய
இரத்தத்தால் அணைந்து போயிற்று.
 

சொன்ன - ஏற்கனவே   விவரித்துக்  கூறிய   சொன்ன  -
சொர்ணம்   பொன்மதில்   என்றுமாம்   துகைத்து  -   காலால்
மிதித்து 'மற்று' வினை  மாற்றுப் பொருளில்  வந்த இடைச்சொல்.
இலங்கையில் அனுமனால் கொல்லப் படாது தப்பியவரே இல்லை
என்பது உயர்வு நவிற்சி.
  

(65)
 

இலங்கை எரிதலும் அதை அயன் படைத்தலும்
 

6581.

'விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது 

எவனோ- 

அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் 

அணிந்த