பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 343

நீங்கியதாம்  என  இசைத்தான்  -   என்னிடம்   இரக்கம்
இல்லாதவனானான் என்று மீண்டும் இராமன் கூறினான்.
 

பாரம் - பெருமை. தகை சால் வீரம்  -  பெருமை  மிகுந்த
வீரம். கரனுடன்  இராமன் செய்த  போரில் வில்முறிந்து  போக,
பரசுராமன்  வில்லை   இராமனுக்குக்  கொடுத்தவன்  வருணன்
என்பதால் வில்லைப்  பற்றித்  தெரிந்தவன்  என்பதால்  'பாரம்
நீங்கிய   சிலை'   என  நினைத்திருக்கலாம்   என   இராமன்
நினைந்தான். முன்பு நினைத்தவுடன்  வந்தவன், இப்போது ஏழு
நாட்களாகியும்  வராமைக்குக்  காரணமாக  இராமன்  இவ்வாறு
கருதினான் என்க.
 

(10)
 

6599.

'புரந்து கோடலும், புகழொடு கோடலும், பொருது

துரந்து கோடலும், என்று இவை தொன்மையின்

தொடர்ந்த;

இரந்து கோடலின், இயற்கையும் தருமமும் எஞ்சக்

கரந்து கோடலே நன்று; இனி நின்றது என், கழறி?
 

புரந்து கோடலும்-(ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற
விரும்பினால்)   அவர்களைப்    பாதுகாத்து    அவரிடமிருந்து
வேண்டிய   பொருளைப்   பெற்றுக்  கொள்வதும்;   புகழொடு
கோடலும்
-  பொருளை  வைத்திருப்பவருடன்   போர்  செய்து,
வெற்றி     பெற்று,    புகழோடு    அப்பொருளைப்   பெற்றுக்
கொள்ளுவதும்; பொருது துரந்து கோடலும்-போரிட்டு வென்று,
பகைவனைத்   துரத்திவிட்டுப்     பொருளைக்     கைப்பற்றிக்
கொள்வதும்; என்று இவை தொன்மையின் தொடர்ந்த- என்ற
இவையெல்லாம்    தொன்மைக்   காலம்   முதல்   தொடர்ந்து
வருவனவாம்; இரந்து கோடலின்- (இருந்தும், நான் வருணனை
வேண்டி வழிபெற விரும்பினேன்) அப்படி இரந்து பெறுவதைவிட;
இயற்கையும்   தருமமும்  எஞ்ச -  எனது   இயற்கைக்கும்,
அறத்துக்கும் குறைவு உண்டாகும்படி; கரந்து கோடலே நன்று-
நமக்கு வேண்டிய  வழியைக் கவர்ந்து கொள்வதே இனி நல்லது;
இனி நின்றது  என் கழறி - இனி வேறு  பேசி  என்ன பயன்
(வருணனைப் பலவாறு குறை கூறி என்னபயன்).
 

புரந்து - பாதுகாத்து. ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பெற
விரும்பினால்   அவர்களை  ஆதரித்துக் காப்பதால் அவராகத்
தரப்பெறுவது 'புரந்து  கோடல்; பகைவருடன்  போர்   செய்து
வென்று,   அவர்க்குரியதை  புகழுடன்   பெறுவது  'புகழொடு
கோடல்;  வலிமையால்  பகைவனை  விரட்டிவிட்டு  வேண்டிய
பொருளை அடைவது துரந்து