பக்கம் எண் :

344யுத்த காண்டம் 

கோடல். இவை மூன்றும்  தொடர்ந்து வரும்முறை.  இதைவிட்டு
இயற்கையும்,  அறமும்  சார்ந்த   இரந்து   பெறும்  முறையை
மேற்கொண்டேன்;  வருணன்  வரவில்லை. இனி  இயற்கைக்கும்
அறத்துக்கும்  மாறான  தெனினும் நமக்கு வேண்டிய வழியைக்
கவர்ந்து பெறுவதே ஏற்றது என்பான் "கரந்து கோடலே நன்று"
என்றான்.
 

(11)
 

6600.

' "கானிடைப் புகுந்து, இருங் கனி காயொடு

நுகர்ந்த

ஊனுடைப் பொறை உடம்பினன்" என்று கொண்டு

உணர்ந்த

மீனுடைக் கடல் பெருமையும், வில்லொடு நின்ற

மானுடச் சிறு தன்மையும், காண்பரால், வானோர்.
 

கானிடைப்    புகுந்து   -     நாட்டை    விட்டுவிட்டு
காட்டுக்கிடையிலே  சென்று வாழ்ந்து; இரும் கனியொடு காய்
நுகர்ந்த
- பெரிதான பழங்களையும் காய்களையும் உண்டதனால்;
ஊனுடைப்  பொறை  உடம்பினன்-  உண்டான  தசையையும்
பெரிய   உடலையும்  உடையவன்   நான்;  என்று  கொண்டு
உணர்ந்த
-  என்று  கருதி,  கேவலமாக  என்னை   உணர்ந்த;
மீனுடைக்  கடற்  பெருமையும் - மீன்களை உடைய கடலின்
பெருமையையும்; வில்லொடு நின்ற மானுடச் சிறுதன்மையும்-
(படைத்துணையேதுமின்றி கையில் வில்லேந்தி நின்ற மானுடத்தின்
சிறுமையையும்; வானோர் காண்பரால்- தேவர்கள் காணட்டும்.
 

நாடாளும்   மன்னர்   குலத்தில்   பிறந்தும்  -   நாட்டில்
வாழாமல்  காட்டில் வாழ  நேர்ந்தமையால்  'கானிடைப் புகுந்து'
என்றார்.    கனியையும்    காய்களையும்    தின்று     பருத்த
உடல்தானேயன்றி  வலிமையில்லை  என்பதை 'கனியொடு  காய்
நுகர்ந்த ஊனுடைப் பொறை உடம்பினன்' என்றார். மானுடத்தின்
சிறுமையையும்,   கடலரசனுடைய   பெருமையையும்  தேவர்கள்
பார்க்கட்டும் என்பான்  மீனுடைக் கடற்  பெருமையும், மானுடச்
சிறுதன்மையும் வானோர் காண்பர்" என்றான். வெகுளியில் பிறந்த
இச்சொற்கள் எள்ளுதற் குறிப்புடையன. 
 

(12)
 

6601.

'ஏதம் அஞ்சி, நான் இரந்ததே, "எளிது" என

இகழ்ந்த

ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி 

ஆக,