| பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு |
| பொரும, |
| பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர். |
| |
ஏதம் அஞ்சி நான் இரந்ததே- தீமைக்குப் பயந்து நான் வருணனை இரந்து வேண்டியதனையே கொண்டு; எளிதென இகழ்ந்த - எளியவன் என்று இகழ்ந்து வராத; ஓதம் அஞ்சினோடு இரண்டும் - ஐந்துடன் இரண்டாகிய ஏழு கடல்களும்; வெந்து ஒரு பொடியாக- எனது அம்பால் வெந்து தூள்தூளாகவும்; பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து - ஐம்பெரும் பூதங்களும் வந்து என்னை வணங்கி; உயிர் கொண்டு பொரும- உயிர் கொண்டு வாழ வேண்டி அழுது தேம்பவும்; பாதம் அஞ்சலர்- நடந்து செல்ல அஞ்சாதவர்களாய்; என் படைஞர் செஞ்செவே படர்வர்- எனது வானரப் படை வீரர்கள் செம்மையாகக் கடலிடையிலே செல்வார்கள். |
அம்பெய்து கடலை வற்றச் செய்தால் கடலில் வாழும் மீன் முதலியவை அழிய நேரிடும் என்ற தீமைக்குப் பயந்து, என்பதை 'ஏதம் அஞ்சி' என்றான். ஏதம் - தீமை. ஏழு கடலும் என் அம்பால் தூளாக, ஐம்பெரும் பூதங்களும் அஞ்சி உயிர் பிழைத்துவாழ என்னை வணங்கி அழுது தேம்ப - கடல் நீர் சுண்டித் தரை வெளிப்பட்டால் என் படைவீரர்கள் செம்மையாக நடந்து செல்வர் என்பது பொருள். செஞ்செவே - செம்மையாக. |
(13) |
6602. | 'மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும், |
| வெறுமை கண்ட பின், யாவரும் யார் என விரும்பார்; |
| குறுமை கண்டவர் கொழுங் கனல் என்னினும் |
| கூசார்; |
| சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்.' |
| |
மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர்- மறுமை இன்பமான முத்தி இன்பத்தை அனுபவித்த உண்மையான ஞானிகள்; ஞாலத்து வரினும் - இந்த உலகத்துக்கு வந்தார்களாயினும் அவரிடம்; வெறுமை கண்டபின் - தாம் விரும்பும் சிறப்பியல்பின்மை கண்டால்; யாவரும் யார் என விரும்பார்- எவரும் அந்த ஞானிகளை யார் என்று கேட்டறிந்து போற்றவிரும்பமாட்டார்; குறுமை கண்டவர் - ஒருவாறு உருவம் சிறிதாயிருப்பதைப் பார்த்தவர்கள்; கொழுங்கனல் என்னினும் கூசார்- அச்சிறிய |