வடிவுடையவர்கள் செழுமையான நெருப்பை ஒத்த திறம் வாய்ந்தவர் என்றாலும் அவர்களுக்கு அஞ்சமாட்டார்; சிறுமை கண்டவர்- உருவத்திலே சிறுமையைப் பார்த்தவர்கள்; பெருமை கண்டு அல்லது தேறார் - பெருமை, வலிமைகளைக் கண்டாலல்லது தெளிவு பெறமாட்டார். |
'மறுமை கண்ட மெய்ஞ்ஞானியர்' என்போர் முத்திப் பேறடைந்த உண்மைமிக்க ஞானிகளாவார். அத்தகைய மேலோர் இவ்வுலகத்துக்கு வர நேர்ந்தாலும் அவர்களிடம் ஏதேனும் சிறப்பியல்புகள் இருந்தால் மட்டுமே உலகத்தார் மதிப்பர்; இல்லையென்றால் 'யார்' என்றே கண்டு கொள்ள மாட்டார்கள். ஒருவரது சிறிய உருவத்தைப் பார்த்தவர்கள் - அச்சிறிய வடிவில் கொழுந்து விட்டெரியும் கனல் போன்ற ஆற்றலும் ஞானமும் இருப்பதை அறிந்து போற்றார். சிறுமை கண்டவர் பெருமை. வலிமைகளைக் கண்டால் அல்லது தெளிவடைந்து போற்றார்; இது பிறிது மொழிதலணியாம். உலகத்தார் இயல்பைக் கூறி வருணன் தன்னை மதித்து வராமைக்குக் காரணம் இதுவென இராமபிரான் கூறலானான். |
(14) |
இராமபிரான் கடலின் மேல் அம்பு விடுதல் |
6603. | திருதி என்பது ஒன்று அழிதர, ஊழியில் சினவும் |
| பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன், பல |
| கால், |
| 'தருதி, வில்' எனும் அளவையில், தம்பியும் வெம்பிக் |
| குருதி வெங் கனல் உமிழ்கின்ற கண்ணினன் |
| கொடுத்தான். |
| |
திருதி என்ப தொன்று அழிதர- மனவடக்கம் என்ற ஒன்று குறைந்திருப்பதால்; ஊழியில் சினவும் பரிதி மண்டிலம் என- ஊழிக் காலமுடிவில் சினந்து தோன்றும் சூரிய மண்டிலம் என்று கூறும்படியாக; பொலிமுகத்தினன்- பொலிந்து தோன்றும் முகத்தினனான இராமபிரான்; பலகால் தருதி வில் எனும் அளவையின்- பலமுறை 'வில்லைத்தா' என்று கேட்ட அளவிலே; தம்பியும் வெம்பி - தம்பியான இலக்குவனும் வெகுளியால் வெம்பி; குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன்- குருதியோடு, கொடிய தீப்பொறி உமிழும் கண்களை உடையவனாய்; கொடுத்தனன்- இராமபிரானிடம் வில்லைக் கொடுத்தான். |