வருணனை நினைத்துத் தவம் புரிந்த போதிருந்த மனவடக்கம் இப்போதில்லாமை பற்றி 'திருதி என்பதொன்று அழிதர' என்றார். திருதி - அடக்கம், குறைதல். கோபத்திலும் இராமன் முகம் பொலிவது தவ, ஒழுக்கங்களால் ஆகும். விரைந்து கடல் மீது அம்பு செலுத்த வேண்டும். என்பதால் 'பல்கால் தருதி வில்' என்றான். பல தடவை கேட்டமையால் பல தடவைபொறுத்தமையும் தெளிவாகிறது. கொடிய நெருப்பை உமிழும் கண்ணினனான இலக்குவன் என்பதை 'குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன்' என்றார். |
(15) |
6604. | வாங்கி வெஞ் சிலை, வாளி பெய் புட்டிலும் |
| மலைபோல் |
| வீங்கு தோள்வலம் வீக்கினன்; கோதையை விரலால் |
| தாங்கி, நாணினைத் தாக்கினன்; தாக்கிய தமரம், |
| ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல். |
| |
வெஞ்சிலை வாங்கி-இலக்குவன் கொடுத்த கொடியவில்லை கைகளில் வாங்கி; வாளி பெய்புட்டிலும் - அம்புகள் பெய்துள்ள அம்பறாத் தூணியையும்; மலைபோல் வீங்கு தோள்வலம் வீக்கினன்-மலை போன்ற பெரிய தோளின் வலது பக்கம் கட்டினான்; கோதையை விரலால் தாங்கி - விரல்களுக்கிடும் உறையையும் விரல்களில் அணிந்து; நாணினைத் தாக்கினன் - வில்லின் நாணை இழுத்துப் பிடித்தான்; தாக்கியதமாம்- அவ்வாறு தாக்கியதால் உண்டான நாண் ஒலி; ஓங்குமுக்கணான் தேவியை- பெருமையில் ஓங்கிய முக்கண் மூர்த்தியான சிவபிரானது தேவியான உமாதேவியை; ஊடல் தீர்த்துளது- சிவபிரானுடன் கொண்ட ஊடலைத் தீர்த்தது. |
பகைவரை அழித்தொழிக்கவல்ல கொடுமையுள்ள வில்லை 'வெஞ்சிலை' என்றார். அம்பறாத் துணியை 'வாளிபெய் புட்டில்' என்றார். கோதை - உடும்புத் தோல். உடும்புத் தோலாலான விரல்களுக்கிடும் உறை இங்கு "கோதை" எனப்பட்டது தமரம் - ஓசை. வில்லின் நாணைத் தாக்கியதால் எழுந்த ஓசை. சிவபிரானுடன் ஊடல் கொண்டு விலகியிருந்த உமாதேவி நாண் ஒலி கேட்ட அச்சத்தால் சிவபெருமானைத் தழுவிக் கொண்டாள் எனவே ஊடல் தீர்ந்தது. என்பதால் 'தாக்கிய தமரம் முக்கணான் தேவியை ஊடல் தீர்த்துளது' என்றார். பௌராணிகம் இலக்கியக் கற்பனைக்குக் களனாயிற்று. |
(16) |
6605. | மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல, வடித்த, |
| சீரிது என்றவை எவற்றினும் சீரிய, தெரிந்து, |