| பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும் |
| சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான். |
| |
மாரியின் பெருந்துளியினும் வரம்பில - மழையின் பெரியதுளிகளை விட அளவற்றவையும்; வடித்த சீரிது என்றவை எவற்றினும் சீரிய- கூர்மையானவையும் சிறந்தவை எனக் கூறப்படும் எல்லாவற்றையும் விடச் சிறந்தவையும் ஆகிய அம்புகளை; தெரிந்து - தேர்ந்து எடுத்து; பார்இயங்கு இரும்புனல் எலாம்- நிலத்தில் பரந்துள்ள நீரெல்லாவற்றையும்; முடிவினில் பருகும் சூரியன் கதிர் அனையன- ஊழிக் காலத்தின் இறுதியில் பருகுகின்ற சூரிய கிரணங்களைப் போன்றவையும் ஆகிய; சுடு சரம் துரந்தான்- வெப்பம் மிக்க அம்புகளைக் கடல் மீது எய்தான். |
இராமன் எய்த அம்புகளின் மிகுதியை உணர்த்த 'மாரியின் பெருந்துளியினும் வரம்பில' என்றார். வடித்த - நன்கு கூராக்கப்பட்ட சிறந்தவை என்று சொல்லப்படும் ஆயுதங்கள் எவற்றிலும் சிறந்தவை என்பதைச் சீரிதென்றவை எவற்றினும் சீரிய' என்றார். நிலமெங்கும் பரந்து நிறைந்திருக்கும் ஆற்று நீர், கடல் நீர் மற்றுமுள்ள எல்லா வகை நீரையும் 'பார் இயங்கு இரும்புனல் எலாம்' என்றார். |
(17) |
6606. | பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற |
| வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கி, |
| திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் |
| எரியின் மும் மடி கொடியன சுடு சரம் எய்தான். |
| |
பெரிய மால் வரை ஏழினும்- பெரிய, கரிய மலைகளான ஏழையும் விட; பெரு வலி பெற்ற- மிகுந்த வலிமையை உடைய; வரி கொள் வெஞ்சிலை- கட்டமைந்த கொடிய வில்லை; வளர் பிறையாம் என வாங்கி- வளர்பிறைச் சந்திரன் எனக் கூறுமாறு நாணால் வளைத்து; திரிவ நிற்பன யாவையும்- சரம், அசாம் ஆகிய எல்லாவற்றையும்; முடிவினில் தீக்கும்- யுகமுடிவிலே தீய்த்து அழிக்கின்ற; எரியின் மும்மடி கொடியன - நெருப்பை விட மூன்று மடங்கு கொடியனவான; சுடு சரம் எய்தான்- சுடு சரங்களை இராமபிரான் கடலின் மீது எய்தான். |
மால்வரை ஏழு - ஏழு பெரிய மலைகள் கைலை, இமயம், மந்தரம் விந்தம் நிடதம் ஏமகூடம், நீலகிரி என்பனவாம் "இச்சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ" என முன்பு (1152) கூறியது காண்க. |
(18) |