பாழி - பெரிய அம்புகள். ஏழு கடல்களையும் நெருப்பாலும் புகையாலும் நிரப்பிக் கொண்டு சென்றனவாதலின் 'எரியொடு புகை மடுத்தேகி' என்றார், யுகாந்த காலத்துப் பெரு நெருப்பின் கொழுந்துகள் போல, அம்புகள் சினந்து சீறி எழுந்து ஓடின என்றார். உருத்து - சினந்து ஆழிமால்வரை - சக்கரவாள கிரி. ஏழு கடல்களுக்கு அப்பால் சக்கரவாள கிரியும், அக்கிரிக்கு அப்பால் இருள் சூழ்ந்த இடமும் உள்ளன என்பது புராணக் கொள்கை. அத்தொலைவிலுள்ள இருளையும் இராமபிரானது அம்புகள் நீக்கின என்றார். |
(20) |
6609. | மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கிச் |
| செரும, வானிடைக் கற்பக மரங்களும் தீய, |
| நிருமியா விட்ட நெடுங் கணை பாய்தலின், |
| நெருப்போடு |
| உருமு வீழ்ந்தெனச் சென்றன, கடல்-துளி உம்பர். |
| |
மருமதாரையின் எரியுண்ட மகரங்கள்- அம்பு தைத்தலால் உயிர் நிலையில் எரியுண்ட மகரமீன்கள்; மயங்கிச் செரும- மயக்கமுற்று நெருங்கவும்; வானிடைக் கற்பக மரங்களும் தீய- விண்ணுலகத்திலுள்ள கற்பக மரங்களும் தீய்ந்து போகவும்; நிருமியாவிட்ட நெடுங்கணை பாய்தலின்- இராமபிரான் சங்கற்பித்து விட்ட நெடிய அம்புகள் பாய்தலால்; நெருப்போடு உருமு வீழ்ந்தென- நெருப்புடன் இடியும் சேர்ந்து விழுந்தது போல்; கடல் துளி உம்பர் சென்றன- கடல்நீர் விண்ணுக்குச் சென்றது. |
மருமதாரை - உயிர் நிலை பெற்ற இடம் (மர்மஸ்தானம்) மகரம் - சுறாமீன். செரும - நெருங்க. நிருமியா விட்ட - தொகுத்து விட்ட சங்கற்பித்துவிட்ட என்பதுமாம். மருமதாரை மறைந்து வாழும் இடமுமாம். கடலின் அடிப்பகுதியில் மறைந்து வாழும் சுறாமீன்கள் எரியுண்டு மயங்கி மேற்பரப்பிலே நெருங்கிப் பரந்தன விண்ணுலகத்துக் கற்பக மரங்கள் தீய்ந்து கருகிய இராமபாணம் கடலிலும், விண்ணிலும் சென்றுதாக்கி நிலைகுலையச் செய்தன எனவுமாம். |
(21) |
6610. | கூடும் வெம் பொறிக் கொடுங் கனல் |
| தொடர்ந்தெனக் கொளுந்த, |
| ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன; உம்பர் |
| ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன- |
| அளக்கர்க் |
| கோடு தீந்து எழ, கொழும் புகைப் பிழம்பு மீக் |
| கொள்ள. |